புறக்கணிக்கப்பட்ட ராஜா Jeffersonville, Indiana, USA 60-0515M 1தேவனுடைய மகிமைக்காக வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலம் இன்று நமக்கு அளிக்கப்படும் ஆசீர்வாதம். ஆகவே அது ஒரு... சென்ற வாரத்தில் நான் சிறிது கஷ்டத்துக்குள்ளானேன் கஷ்டம் என்று சொல்ல முடியாது. எனக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை, அதற்காக நான் மருத்துவமனையில் இருந்தேன் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்பதற்காகவே அங்கு நான் சென்றிருந்தேன். நீங்கள் மேல் வயிறு கீழ் வயிறு எல்லாம்... சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவர்கள் மறுபடியும் மறுபடியும் எக்ஸ்ரே எடுக்க வேண்டியதாயிருந்தது. நாம் வெளிநாடு ஊழியத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மருத்துவ பரிசோதனைக்கு நாம் செல்ல வேண்டும். சகோ. ராபர்ட்ஸும் மற்றவர்களும் இந்த மருத்துவ பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துக் கொள்கின்றனர் என்று நினைக்கிறேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் இதைச் செய்துக் கொள்ளவில்லை. 2தொல்லை என்னவென்றால் - எனக்கு அந்த ஆமணக்கு எண்ணெய் பிடிக்காது. அது ஒன்றுதான். அதற்குப் பதிலாக கொடுக்க வேறொன்றும் இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். எனவே நான்... ஓ, அவர்கள் அதை எனக்குக் கொடுத்த போது மிகுந்த குமட்டல் உண்டானது. அது எப்படி எனக்கு குமட்டல் உண்டாக்குகின்றதென்று என் வாழ்க்கைக் கதையில் நான் கூறியிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. என் அருமை மருத்துவர் நண்பரிடம், “குடிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லையா?'' என்று கேட்டேன். அவர், “இல்லை என்று நினைக்கிறேன், சகோ. பிரான்ஹாமே'' என்றார். 3ஓ, அந்த ஸ்திரீ ஆமணக்கு எண்ணெயுடன் வந்தபோது அது தென்பட்ட விதம்... ஒருக்கால் நான் மிகைப்படுத்திக் கூறலாம், ஆனால் அது அதன் அளவு கால்காலன் (quart) போல் காணப்பட்டது. அவ்வளவு அளவை நான் முன்பு கண்டதில்லை. நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றி, அதை முடிவில் உள்ளே இறக்கி விட்டேன். ஆனால் இப்பொழுது, எனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அனைத்திலும் அது பரிபூரண பரிசோதனையாக இருந்ததற்காக கர்த்தரை துதிக்கிறேன். நான் பரிசோதனையில் நூறு சதவீதம் தேறினேன். உலகில் நான் விரும்பும் எந்த பாகத்துக்கும் செல்லலாம். அங்கு லூயிவில்லில் இருந்த மூன்று சிறந்த மருத்துவ நிபுணர்களிடம், ''எனக்கு பத்து சதவிகிதம் குறைபாடாவது உடலில் காணப்படுகிறதா?'' என்று கேட்டேன். அவர், “உமக்கு சிறிதும் கூட குறைபாடு இல்லை. நீர் எல்லா வகையிலும் பூரண ஆரோக்கியமுள்ளவராயிருக்கிறீர்” என்றார். நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அது பரலோகப் பிதாவினிடமிருந்து அல்லாமல் வேறு யாரிடமிருந்து வர முடியும்? அவர், ''உம்முடைய உடலில் ஏற்பட்ட ஆமணக்கு எண்ணெய் ஓட்டம் நீர் இன்னும் வாலிபமாயிருக்கிறீர் என்பதைக் காண்பிக்கிறது. உம்முடைய இரத்த அணுக்கள் இன்னும் பிளவுபடக் கூட இல்லை. சகோ. பிரான்ஹாமே, உமக்கு நல்ல உடல் நிலை உள்ளது'' என்றார். ஆகவே நான், “எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்றேன். 4ஆகவே மருத்துவமனையிலிருந்த ஒவ்வொரு நர்ஸிடமும் மருத்துவரிடமும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பேசவும் சாட்சி கூறவும் எனக்கு சிலாக்கியம் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட மருத்துவர், அவர் இன்று காலை இங்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆகவே நான் - எனக்கு... இந்த உலகில் இன்னும் நல்லவர்கள் - உண்மையான மனிதர் - உள்ளதை அறிந்து மகிழ்வுறுகிறேன். அந்த உடல் பரிசோதனைக்கு ஐந்து நாட்கள் எடுத்தன. ஒவ்வொரு பரிசோதனைக்கும் இருநூறு முந்நூறு டாலர்கள் எனக்கு செலவாயிருக்கும். ஆனால் பரிசோதனை முடிவில் அவர்கள், ''நீர் செய்யும் கர்த்தருடைய ஊழியத்துக்கு இது எங்கள் காணிக்கை'' என்றார்கள். பாருங்கள்? ஆம். அவர்கள் எதுவுமே... “எவ்வளவு பணம் தரவேண்டும் என்று நீர் கேட்பது எங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது. எங்களுக்காக நீர் ஜெபித்தால் போதும்” என்று சொல்லிவிட்டனர். அவர்கள், “உங்களுக்குள் ஒருவிதமான உணர்ச்சி உள்ளதை நாங்கள் காண்கிறோம். அது என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. அது கோளாறு என்பது போல் தோன்றவில்லை... வெளிப்புறத்தில் உமக்கு பயமோ அல்லது அமைதிக் குலைச்சலோ ஒன்றுமில்லை. ஆனால் உங்களுக்குள் எங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி உள்ளது” என்றனர். நான், ''நீங்கள் சிறிது நேரம் இங்கு உட்கார்ந்தால் அது என்னவென்று கூறுகிறேன்'' என்று சொல்லி, அவர்களிடம் தரிசனங்களைக் குறித்து கூறினேன். அது அவர்களுக்கு வித்தியாசமான ஒன்று. அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அவர்களிடம் வேதாகமதத்தைக் குறித்து கூறினேன். அன்றொரு நாள் கர்த்தர் எனக்கு அளித்த தரிசனத்தை அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் குழந்தைகளைப் போல் அழுதார்கள் - அங்கு உட்கார்ந்து கொண்டு அழுதார்கள். ஆகவே நான்... அவர்கள்... நான் ''என்னை ஏதோ மதாபிமானமுள்ள பைத்தியக்காரன் என்பதாக நீங்கள் கருதவில்லை என்று நம்புகிறேன்'' என்றேன். 5அவர்கள், ''இல்லவே இல்லை. சகோ. பிரான்ஹாம். நாங்கள் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறோம். ஆனால் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறோம். இவைகளைக் கற்றுக்கொள்ள பள்ளிக்கூடத்துக்கு செல்ல அவசியமில்லை. இவை சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து வருகிறதென்று விசுவாசிக்கிறோம்'' என்றனர். அவர்கள் லூயிவில்லில் தலை சிறந்த மூன்று மருத்துவர்கள், அது பெற்றிருந்த மிகச் சிறந்தவர்கள். எனவே, கர்த்தர் சில விதைகளை அங்கு விதைக்கும்படி செய்தார் என்பதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 6அங்கிருந்த ஒவ்வொரு நர்ஸும் அவர்களுடன் நான் பேசினேன். ஒரு நாள் காலையில் நான் எக்ஸ்ரே அறையிலிருந்து வெளியே வந்த போது நான் சொன்னேன்... ஒரு எளிய முதிய - ஸ்திரீயைக் கண்டேன். அவள் மிகவும் வியாதிப்பட்டிருந்தாள். நான் மெல்ல நகர்ந்து, நகர்ந்து, அவள் அருகில் சென்றேன். “அவள் ஒருக்கால் மரித்துக் கொண்டிருக்கக் கூடும்” என்று எண்ணினேன். “சகோதரியே, உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். அவள், “கேளுங்கள், ஐயா” என்றாள். ''நீங்கள் கிறிஸ்தவளா?'' என்றேன். அவள், ''நான் ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவள்'' என்றாள். நான், ''அதைச் சிறிது தெளிவுப்படுத்த விரும்புகிறேன், நீங்கள் கிறிஸ்தவளா, உண்மையில் கிறிஸ்தவளா, என்று நான் - நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் இவ்வாழ்க்கைக் கடலைத் தாண்டி மறுபுறமுள்ள தேசத்துக்குச் செல்ல நேரிட்டால், அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா?“ என்று கேட்டேன். அவள், “ஆம், ஐயா, நான் செல்வேன்” என்றாள். நான், ''அப்படியானால், தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. காற்று எந்த பக்கம் அடித்தாலும், நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ள வரைக்கும் சரியாயிருக்கிறீர்கள்'' என்றேன். இப்படி நாம் சென்று கொண்டேயிருந்தால், இவ்வுலகில் எத்தனையோ அருமையானவர்கள் இன்னும் உள்ளனர். 7இப்பொழுது, இன்று நான் ஒரு தரிசனத்துடன் இங்கு வந்திருக்கிறேன், அதைச் சற்று கழிந்து உங்களிடம் கூறுகிறேன். ஆகவே, முதலில் தேவனுடைய வார்த்தையின் பேரில் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் வார்த்தையே மிகவும் அவசியமானது என்பது என் விசுவாசம் - இப்பொழுது அது மிக மிக அவசியம் வாய்ந்தது. 8சகோ. சார்லி காக்ஸையும் மற்றும் சகோதரன் - என் நண்பர்கள் ஒன்றாக நின்று கொண்டிருப்பதையும் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. சகோதரன்... எனக்கு ஞாபகம் வரவில்லை... ஜெப்ரீஸ் (அவர் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை), மற்றும் ஜார்ஜியாவிலிருந்தும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் விலையேறப்பெற்ற சகோதரர்களாகிய நீங்கள் என் பழைய காலத்து நண்பர், பில், இன்று காலை இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் (அவர்தான் என்று நினைக்கிறேன்), மற்றும் - மற்றும் அநேகர் ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள சகோதரர் அங்கிருக்கிறார். அவர்கள் தான் எனக்கு இந்த 'சூட்'டை கொடுத்தவர்கள். உங்களுக்குத் தெரியுமா. இது நான் இதுவரை அணிந்த சிறந்த 'சூட்'டுகளில் ஒன்று. அதை அணியும் போது மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள். கடந்த சில நாட்களில் எனக்கு என்ன நடந்தது என்று நான் உங்களிடம் கூறும்போது, அது ஏன் எனக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று நான் கருதுகிறேன் என்பதைக் காண்பீர்கள். 9இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், என் வாழ்க்கையில் முன்னைக் காட்டிலும் அதிகமாக போரில் ஈடுபட எத்தனித்திருக்கிறேன். ஏனெனில் நான் இப்பொழுது காண்பது என்னவெனில் - ஒருக்கால் நான் இன்றைக்கே மரிக்கக் கூடும். அது - உங்களுக்குத் தெரியாது. இருதயத் துடிப்பின் வரைபடங்களும், இன்னும் பதினாறு விதமான எக்ஸ்ரேக்களும், உடல் நிலை பரிசோதனை முழுவதும், பூமியிலுள்ள எந்த ஒரு மனிதனும் இருக்க வேண்டிய விதத்தில் நான் ஆரோக்கியமாயிருக்கிறேன் என்பதைக் காண்பித்தன. அதற்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் அப்படியிருந்த போதிலும், அப்படியிருப்பதற்காகவும் அவர் என்னை அவருடைய ஊழியத்தில் இன்னும் வைத்திருப்பதற்காகவும் நான் தேவனுக்கு நன்றியுவுள்ளவனாக இருந்தபோதிலும், சில நாட்களுக்கு முன்பு அவர் எனக்குக் காண்பித்தது அதுவல்ல, பாருங்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 10நான் நினைக்கிறேன் இன்றிரவு... அது பரவாயில்லை, இல்லையா? (சகோதரன் நெவில் ''ஆம், ஐயா'' என்கிறார் - ஆசி) நமது - நமது விலையேறப்பெற்ற சகோதரர், சகோ. நெவில், சுயநலமில்லாத ஒருவர். சென்ற ஞாயிறு நீங்கள் யாராகிலும் இங்கிருக்க நேர்ந்து அவர் ''எண்ணெய் கலசம்“ என்பதன் பேரில் அளித்த அந்த அற்புதமான செய்தியைக் கேட்டிருப்பீர்களானால் சென்ற ஞாயிறு பரிசுத்த ஆவியின் மூலம் சகோ. நெவில், தேவன் இங்கு ஒன்று சேர்த்துள்ள இந்த சிறு மந்தைக்கு அளித்த அந்த செய்தியானது நான் இதுவரை கேட்ட தலைசிறந்த செய்திகளில் ஒன்றாகும். கர்த்தருக்குப் பிரீதியாயிருந்து, சகோதரன் நெவிலுக்கும், சபைக்கும் இது சரியானதாக இருக்குமென்றால், இன்றிரவு மறுபடியுமாக நான் பேசி ஒரு தொடரை ஆரம்பிக்க விரும்புகிறேன். கூறப்போனால், திங்கள் இரவு... இல்லை, ஞாயிறு இரவு மற்றும் புதன் இரவு மற்றும் அடுத்து ஞாயிறு, நான் ஆராய்ந்த ஒன்றைக் குறித்த ஒரு தொடர். 11நான் மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்கள் அந்த அறையை அதன் வழக்கமான தொகைக்கு மூன்றில் ஒரு பங்கு தொகைக்கு எனக்களித்தனர். நான் என் வேதாகமங்களையும் புத்தகங்களையும் அங்கு கொண்டு சென்று, படுக்கையை சுற்றி வைத்து விட்டு அங்கு கால்களை மடக்கி உட்கார்ந்து, என் வேதாகமங்களை சுற்றிலும் பரப்பி, அவர்கள் ஆமணக்கு எண்ணெய் கொண்டு வரும் வரைக்கும் மகிழ்ச்சியான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஆமணக்கு எண்ணெய் கொண்டு வந்தவுடனே, என் மகிழ்சி என்னை விட்டுப் போய்விட்டது. அத்துடன் நான் முடிந்துவிட்டேன். சகோ. பாட், எனக்கு உண்மையில் குமட்டல் ஏற்பட்டது. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் முதல் மூன்று நான்கு நாட்கள் எனக்கு நல்ல தருணம் உண்டாயிருந்தது. எனக்கு நல்ல தருணம் உண்டாயிருந்தது. நான் எபேசியர் நிரூபத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தேன். ஓ, சபை ஒன்றாக உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பது, அது மிகவும் அழகானது என்று எண்ணுகிறேன். ஆகவே - ஆகவே உங்களால்... 12இப்பொழுது உங்களுக்குப் போவதற்கு ஒரு சபை இருக்குமானால், நீங்கள் அங்கு சென்று உங்கள் பணித்துறைக் கடமைக்குரிய இடத்தில் நில்லுங்கள். ஆனால் உங்களுக்கு ஒரு சபை இல்லாமலிருந்து இன்றிரவும், புதன் இரவும், அடுத்த ஞாயிறு இரவும் நீங்கள் வரப் பிரியப்பட்டால், இன்றிரவு நான் எபேசியர் முதலாம் அதிகாரம், புதன் இரவு எபேசியர் 2-ம் அதிகாரம், அடுத்த ஞாயிறு எபேசியர் 3-ம் அதிகாரத்தின் பேரில் பேசி சபையை ஒழுங்குப்படுத்த எத்தனித்துள்ளேன். நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? - அதாவது அதன் ஸ்தானத்திற்குரிய இடத்தில் பொருத்துதல். அது சபையை ஊன்றக் கட்ட ஏதுவாயிருக்கும் என்று எண்ணுகிறேன். நான் - நான் இந்த பிரான்ஹாம் கூடாரத்திற்கு வருகிறவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அருமையான சகோதரர்களாகிய நீங்கள் யாராகிலும்... உங்களில் சிலர் கூட்டங்களை ஒழுங்கு செய்திருக்கிறீர்கள் என்று அறிவேன். செல்லர்ஸ்பர்க்கிலுள்ள நமது சகோதரர்களும் மற்றவர்களும் கூட்டங்கள் நடத்தினர். பாருங்கள். அவை எழுப்புதல் கூட்டங்கள். அவைகளில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர். அவர்கள் “ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்து வாசலில் நின்று கொண்டிருக்கும் இளைஞர்கள். அவர்களுடைய சொந்த சபை சத்தியத்தைப் புறக்கணித்த போது, அவர்கள் நடந்து வெளியே வந்தனர்”. தேவன் அவர்களை ஊழியத்துக்கு அழைத்தார். 13ஆம், ஐயா, அந்த மனிதனை நான் மெச்சுகிறேன்... அவருடைய பெயரும் கூட எனக்கு ஞாபகம் வரவில்லை. அவர் ஒரு இளைஞர், காண்பதற்கு அழகானவர். அவருடைய அழகிய மனைவியும் பிள்ளைகளும். ஆகவே - ஆகவே சகோ. ஜூனி ஜாக்ஸன் அங்கு சில கூட்டங்களை வைத்திருக்கிறார். அவர் தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு மற்றொரு அற்புதமான, குறிப்பிடத்தக்க விருது. உங்கள் சபைகளில் எழுப்புதல் கூட்டங்கள் நடக்கும் போது, அங்கு செல்லுங்கள். ஏனெனில் அது உங்கள் - அதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. ஏனெனில் உங்களுக்குத் தெரியாது - ஒருக்கால் ஒரு பாவி பீடத்தண்டை வரலாம். அவனை கிறிஸ்துவினிடம் வழி நடத்த உங்களுக்கு ஏவுதல் இருக்கலாம். அப்பொழுது மறுபுறத்தில் உங்களுக்கு மிகுந்த பலன் உண்டாயிருக்கும். இங்கு கூடாரத்தில் நாங்கள் போதித்து சபையை ஒழுங்குபடுத்தி, இப்படியாக உதவி செய்துக் கொண்டே செல்வோம். 14நான் கடிகாரம் கொண்டு வரவில்லை. ஆகவே யாராகிலும் ஒருவர் என் மேல் கவனமாயிருக்க வேண்டும். 'டாக்'கிடம் கடிகாரம் உள்ளதாக எனக்குக் காண்பித்தார்... ஆதலால் இப்பொழுது... 15இப்பொழுது, நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. இப்பொழுது எங்கள் வாசல்களில் அந்நியர்கள் இருப்பார்களானால், அவர்களை எங்கள் முழு இருதயத்துடன் நிச்சயம் வரவேற்கிறோம். இந்தச் சிறு கூடாரத்துக்கு நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள். எங்களுக்குப் பெரிய கட்டிடம் இல்லை. நாங்கள் ஒன்றைக் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். அது ஒரு பெரிய கட்டிடமாக இருக்காது. ஆனால் சாதாரண... இது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. கர்த்தர் எங்களை அனுமதித்தவுடனே செளகரியமுள்ள ஒரு சிறு சபையைக் கட்ட உத்தேசித்திருக்கிறோம். உங்களில் அநேகர் அதற்கென முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறீர்கள், அதை நாங்கள் நிச்சயம் மெச்சுகிறோம். 16இன்று காலை நீங்கள் என்னுடன் வேதாகமத்தை 1சாமுவேல் 8-ம் அதிகாரத்துக்குத் திருப்ப நான் விரும்புகிறேன். நாம் 19-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம் - நம்முடைய பொருளுக்கென நாம் 19, 20 வசனங்களைப் படிப்போம். அதை நீங்கள் திருப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முன்பு... அதைப் படித்து விட்டு நாம் ஜெபத்துக்கு செல்வோம். இன்று காலை யாருக்காவது விண்ணப்பங்கள் இருந்து, “என்னை நினைவு கூருங்கள்” என்று சொல்ல விரும்புகிறீர்களா? 17நமது கடந்த - இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு நான் நடத்தின கூட்டத்தில்... நீங்கள் வேதாகமத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் போது, இதைக் கேளுங்கள். சாட்டக்வாவில் கூட்டங்கள் ஆறாம் தேதி தொடங்குகின்றன. நாங்கள் ஒரு மகத்தான தருணத்தை எதிர் பார்க்கிறோம் - ஓஹையோவிலுள்ள மிடில்டவுன். விடுமுறை உள்ளவர்கள் வாருங்கள் - ஆற்றங்கரையில் ஒரு பெரிய 'காம்ப்' கூட்டங்கள். அங்கு நீங்கள் எல்லா பிரசங்கங்களையும் கேட்கலாம். அங்கு அவர்கள் ஆற்றங்கரையில் - பிரசங்கிமார்கள் ஒவ்வொரு காலையிலும், பகல் இரவு முழுவதும் அவர்கள் எல்லாரும் அங்கு ஒன்று கூடுகின்றனர். அது ஒரு பெரிய 'காம்ப்' மைதானம். 'சில்வர் ஹில்ஸ்' என்னுமிடத்தில் உள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது. அது எட்டு அல்லது பத்தாயிரம் பேரைக் கொள்ளும். அது எப்பொழுமே ஜனங்களால் நிறைந்திருக்கும். எங்களுக்கு ஓஹையோவில் மகத்தான தருணம் இருந்து வருகிறது. 18அன்றொரு நாள் காலை நான் ஜெபிக்கச் சென்ற முதியோரான சகோ. கிட் - மூன்று வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து நான் உங்களிடம் கூறினது ஞாபகமிருக்கும். அவர் இருபத்து நான்கு மணிநேரம் வரைக்குமே உயிரோடிருப்பார் என்று மருத்துவர் கூறிவிட்டார். அவர் இப்பொழுது எழுந்து நடந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு வேத வசனத்தை எடுத்துரைத்தார், அவரால் பாட முடியாத ஒருபாடல். அன்றொரு நாள் காலை நான் சென்று அவரைக் கண்டபோது, அவர் மேல் கம்பளித்துணி போடப்பட்டிருந்தது. நான் வேகமாக அடைவதற்கென விடிவதற்கு மூன்று நான்கு மணி நேரத்துக்கு முன்பே இவ்விடம் விட்டுச் சென்றுவிட்டேன். அவர் அன்று மரித்துவிடுவார் என்று கூறப்பட்டது - 'பிராஸ்ட்ரேட்' சுரப்பியில் புற்றுநோய். 19அவருடைய விலையேறப் பெற்ற வயோதிப மனைவி நாள் ஒன்றுக்கு 50 சென்டு கூலிக்கு துணிகளைச் சலவை செய்து கொடுத்தார்கள். அவர்களுடைய கணவரை சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்ய அனுப்புவதற்கென அவர்கள் பொழுது விடிவதற்கு முன்பு வேலை தொடங்கி இரவுக்கு பிறகும் வேலை செய்து 50 சென்டு சம்பாதித்தார்கள். அவர் இரண்டு வாரகாலம் எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்தின பிறகு காணிக்கை எடுத்தபோது, அவருக்கு 80 சென்டு கிடைத்தது. அன்றொரு நாள் காலை அந்த வயோதிப தம்பதிகள் அங்கு உட்கார்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவருடைய தோளின் மேல் அவர் சிறு கம்பளித் துணியை போர்த்துக் கொண்டிருந்தார். அவரால் இரட்சிக்கப்பட்ட ஒருவர் - தொண்ணூற்று இரண்டு வயது நிரம்பியவர், ஆனால் மிகுந்த புத்திசாலி, முழுக்க முழுக்க பெந்தெகொஸ்தேகாரர் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான், ''வயோதிபராகிய நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். “படகு வரக் காத்திருக்கிறோம்'' என்றனர். அவர்கள் வேலையை முடித்துக் கொண்டு, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி விட்டு, அதற்கேற்ற தங்கள் பலனைப் பெற அங்கு செல்ல இப்பொழுது ஆயத்தமாயுள்ளனர். ஆகவே நான் சகோதரன் செவ், சகோதரன் கிட்ஸனிடம் கூறினேன். அன்று காலை நான் சகோ. கிட்டிடம், “சாட்டக்வா கூட்டங்களுக்கு வருகிறீர்களா?'' என்று கேட்டேன். நேற்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, “சகோ. பிரான்ஹாமே, நான் வருகிறேன்'' என்றார். அது மிகவும் அருமையானது. 20என் புது ஊழியத்தின் விளைவாக அநேகக் கூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சகோதாரன் - இங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பாப்டிஸ்டு சகோதரன் - அவருக்கு ஒரு வாலிப மகள் இருக்கிறாள். அவள் ஒருவிதம் சொற்கேளாதவளாகத் திரிந்துக் கொண்டிருந்தாள். நான் அவரிடம், ''உம்முடைய மகளை உமக்கு கர்த்தராகிய இயேசுவுக்காக அளிக்கிறேன்'' என்று அன்று காலை உரைத்தேன். அவர் வீடு திரும்பின போது, அவள் இரட்சிக்கப்பட்டிருக்கக் கண்டார். ஞானஸ்நானம் பெறுவதற்கென இன்று காலை அவள் கொண்டு வரப்பட்டாள். இப்படியாக நடந்து கொண்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் என் நண்பர் திரு. சாத்மன் அவர்களின் மாமியார் மரணத்தருவாயில் இருந்தார்கள். நான் அவரிடம், “நீங்கள் அங்கு அடையும் போது, அவர்களை சுகமடைந்தவர்களாய்க் காண்பீர்கள் என்றேன். அது அப்படியே நடந்துகொண்டு வருகிறது. ஜனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். அது இப்பொழுது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. அது முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஓ, நாம் வேண்டிக் கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கழுகின் நாட்களாகிய கடைசி நாட்களில், மகிமையான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 21இப்பொழுது வேத வாசிப்பிற்கென்று உங்கள் வேதாகமத்தை எடுத்துக் கொண்டீர்களா? 1சாமுவேல் 8-ம் அதிகாரம், நான் ஜீனிடம், ஒலிப்பதிவுக்கு செல்லும் ஒலிப்பெருக்கியின் அருகில் நிற்பேன் என்று வாக்கு கொடுத்தேன். மற்ற இவையனைத்தும். இப்பொழுது தான் நாம் கூட்டத்தைத் தொடங்குகிறோம். ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம், எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாக புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றார்கள். சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். கர்த்தர் சாமுவேலை நோக்கி; நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார். அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான். 1சாமு.8 : 19-22 அடுத்த சில நிமிடங்களுக்குப் பேசுவதற்கென இன்று காலை இதிலிருந்து, நான் பொருள் என்று அழைக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், புறக்கணிக்கப்பட்ட ராஜா என்னும் பொருளைத் தெரிந்துக் கொள்ள விரும்புவேன். 22மற்றெல்லா காலங்களைப் போல, அந்தக் காலத்திலும் ஜனங்கள், தேவன் அவர்களை வழி நடத்துவதைப் பிரியப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த வழியில் வழி நடத்துதலைப் பெற்றிருக்க விரும்பினர். இன்று காலை நாம் காணும் இவ்வரலாற்றில்... நீங்கள் வீடு சென்ற பிறகு, அதை முழுவதும் படிப்பது நல்லது. அது தேவனுடைய மனிதனாகிய சாமுவேல் தீர்க்கதரிசியின் நாட்களில் நடந்தது. அவன் நியாயமுள்ளவனும் நல்லவனுமாயிருந்தான் - அவன் ஜனங்களிடம் கெளரவமாயும், பெயர் பெற்றவனாயும், உண்மையுள்ளவனாயும், நேர்மையுள்ளவனாயும் நடந்து கொண்டான். அவர்களை அவன் ஒருபோதும் வஞ்சிக்காமல், சரியாக “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதைத் தவிர வேறொன்றையும் அவர்களிடம் உரைக்கவில்லை. 23ஆனால் ஜனங்களோ இந்தத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்னும் நிலைக்கு வந்துவிட்டனர். பெலிஸ்தியரும், எமோரியரும், ஏத்தியரும், உலகிலிருந்த மற்ற ஜாதிகளும் ராஜாக்களைப் பெற்று, இந்த ராஜாக்கள் அவர்களை ஆட்சி செய்து, வழிநடத்தி, அவர்களுக்காக யுத்தங்களில் போர் புரிந்ததை இவர்கள் கண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள், மற்றவர்கள் பெற்றிருந்த ராஜாக்கள் பிரஜைகள் என்பதைப் போல் தங்கள் அமைப்பையும் மாற்றிக் கொள்ள விரும்பினர். ஆனால் எந்த காலத்திலுமே, தம்முடைய பிள்ளைகள் உலகத்தின் ஜனங்களைப் போல் நடந்து கொள்ள வேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல. அவர்கள் உலகத்தின் ஜனங்களைப் போல் அரசாட்சி செய்யப்பட வேண்டுமென்பது அவருடைய நோக்கமல்ல. தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதுமே விசேஷித்தவர்கள், வித்தியாசமானவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் அமைப்பும் உலகத்தின் ஜனங்களின் விருப்பங்களுக்கு எப்பொழுதுமே முரணாக அமைந்துள்ளன. 24இஸ்ரவேல் ஜனங்கள் சாமுவேலிடம் வந்து, ''நீர் முதிர் வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஏனெனில் அவர்கள் சாமுவேலைப் போல் உண்மையாயிருக்கவில்லை, அவர்கள் பரிதானம் வாங்கினார்கள். சாமுவேலே, உம்முடைய குமாரர் உம்மைப்போல் இல்லை. ஆகவே நீர் சென்று, எங்களுக்காக ஒரு ராஜாவைக் கண்டுபிடித்து அவனை அபிஷேகம் செய்து, உலகிலுள்ள மற்ற ஜாதிகளுக்கு இருக்கிறபடி எங்களுக்கும் ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்கள். அது கிரியை செய்யாது என்று சாமுவேல் அவர்களிடம் கூற முயன்றான். அவன், “நீங்கள் அப்படிச் செய்வீர்களானால், முதலாவதாக என்ன தெரியுமா, அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதத்திற்கு முன் ஓடும்படி செய்து, தன் ரத சாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக் கொள்வான். அது மாத்திரமல்ல, அவன் உங்கள் குமாரத்திகளை உங்களிடமிருந்து அழைத்து வந்து, சேனையைப் போஷிக்க அவர்களை சமையல் பண்ணுகிறவர்களாகவும் அப்பம் சுடுகிறர்களாகவும் வைத்துக் கொள்வான். அதுவும்மல்லாமல், உங்கள் தானியத்திலும் உங்கள் எல்லா வருமானத்திலும் அவன் வரிகள் வாங்குவான். அரசாங்கத்தின் கடனை செலுத்தித் தீர்க்க உங்கள் வருமானத்தின் மேல் வரிகளை விதிப்பான். நீங்கள் முழுவதும் தவறு செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான். ஆனால்... ஆயினும் ஜனங்கள், “மற்ற ஜாதிகளைப் போல் நாங்களும் இருக்க விரும்புகிறோம்'' என்றார்கள். 25ஆண்களும், பெண்களும் மற்றவர்களைப் போல் இருக்க வாஞ்சிக்கின்றனர். இந்த உலகில் வாழ்ந்த ஒரே மனிதன் மாத்திரமே நமக்கு உதாரணமாயிருக்கிறார். அவர்தான் நம்மெல்லாருக்காகவும் மரித்த நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்து. அவர் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பரிபூரண எடுத்துக்காட்டாய் இருக்கிறார் - எப்பொழுதுமே பிதாவுக்கடுத்த பணிகளில் ஈடுபட்டு சரியானதை மாத்திரம் செய்து வந்தார். 26சாமுவேல் எவ்வளவாக ஜனங்களிடம் அந்த யோசனையை கைவிட வேண்டுமென்று ஆலோசனை கூறின போதிலும், அவர்கள் இரவும் பகலும் ஓயாமல், ''எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும். எங்களுக்கு ஒரு மனிதன் வேண்டும். இவரே எங்கள் தலைவர் என்று நாங்கள் சொல்லக்கூடிய ஒரு மனிதன் எங்களுக்கு வேண்டும்'' என்றனர். அது ஒருபோதும் தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை. மனிதன் மனிதனை ஆளுதல் என்பது தேவனுடைய சித்தமாக முன்பு இருந்ததுமில்லை, இனி ஒருக்காலும் இருக்கப் போவதுமில்லை. தேவனே மனிதனை ஆளுகை செய்கிறார். அவரே நம்மை ஆளுகிறவர், நம்முடைய ராஜா. இந்த நாளின் மிக மிக இடரானதும் அதுவே ஆகும். ஏனெனில் இன்றைக்கும் மனிதன் அதே கருத்தைக் கொண்டவனாகக் காணப்படுகிறான். மனிதன் மனிதனை ஆள்வதில்லை, தேவனே, இன்னும் மனிதனை ஆள்கிறவர் என்பதை இவர்களால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் சவுல் என்னும் பெயருடைய ஒருவனைத் தங்களுக்கு ராஜாவாகத் தெரிந்து கொண்டனர். அவன் கீஸ் என்பவனின் குமாரன். அவன் பிரபலமானவன், கெளரவம் வாய்ந்தவன். அவன் ஜனங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு இருந்தான். ஏனெனில் அவன் மிக உயரமானவனும் கண்ணியமான தோற்றத்தை உடையவனுமாயும் இருந்தான். இஸ்ரவேலில் இருந்த அனைவரும் அவன் தோளுக்கு கீழாயிருக்கத் தக்க உயரமுள்ளவனாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் ராஜாவின் தோற்றத்தை உடையவனாயும் அழகானவனாயும் இருந்தான். அவன் மிகுந்த அறிவாளி, அசாதாரண மனிதன். 27அப்படிப்பட்ட ஒரு மனிதனையே ஜனங்கள் இன்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். சபை பரிசுத்த ஆவியினால் ஆண்டு வழி நடத்தப்பட வேண்டும் என்னும் தேவனுடைய நியமனம் ஜனங்களுக்குத் திருப்தி அளிப்பதாகத் தோன்றவில்லை. யாராகிலும் ஒரு மனிதன், ஒரு ஸ்தாபனம், குறிப்பிட்ட சில ஜனங்கள் சபையை ஆள வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் ஆவிக்குரியவர்களாய், பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட தங்களை பரிபூரணமாக தேவனுடைய கரங்களில் சமர்ப்பிக்க அவர்களால் முடிவதில்லை. தங்களுடைய மார்க்கத்தை நடத்த, தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எடுத்துக் கூற அவர்களுக்கு யாராவது ஒருவர் தேவைப்படுகிறது. ஆகவே இந்த மனிதன் ஜனங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்திருந்தான், ஏனெனில் அவன் மிகவும் நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான். இன்றைக்கு முழுவதும் அவ்வாறேயுள்ளது. நமது சபைகளைக் கட்டுப்படுத்த, தேவனுடைய சபையைக் கட்டுப்படுத்த நாம் அப்படிப்பட்டவர்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கு விரோதமாக நான் ஒன்றும் கூறவில்லை. அது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை, அவ்வாறு முன்பும் இருந்ததில்லை, இனி ஒருக்காலும் இருக்கப் போவதுமில்லை என்னும் கருத்தை வலியுறுத்தவே இதைக் கூறுகிறேன். தேவனே தம்முடைய ஜனங்களை, ஒவ்வொரு நபரையும் ஆளுகை செய்யவேண்டும். 28நாம் காண்கிறோம் கீஸின் குமாரனான இவன் - மிகப் பெரியவன், உயரமான தோற்றத்தை உடையவன், அவனுடைய... அவன் ஜனங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்திருந்தான். அவன் அணியும் ராஜ அங்கியும், தலையிலுள்ள கிரீடமும், அவன் நடக்கும் போது எல்லாரை விட உயரமான தோற்றமும், இஸ்ரவேல் ராஜ்யத்துக்கு அனுகூலமான ஒன்றாக இருந்திருக்கும். மற்ற ஜாதிகளின் ராஜாக்கள் “இவனைப் பாருங்கள்!'' என்று வியந்திருப்பார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவனைச் சுட்டிக் காட்டி, ''எங்களுக்கு எவ்வளவு பெரிய ராஜா இருக்கிறார் பாருங்கள் எங்களை ஆள எவ்வளவு பெரிய மனிதன் இருக்கிறார் பாருங்கள்!'' என்று சொல்லியிருப்பார்கள். இன்றைய சபையிலும் அது எவ்வளவு உண்மையாயுள்ளது என்பது வருந்தத் தக்கது. அவர்கள், “எங்கள் போதகர் குறுகிய மனப்பான்மை உடையவரல்ல. அவர் பெரியவர். அவர் ஹார்ட்ஃ போர்டில் (Hartford) பட்டம் பெற்றவர், அல்லது வேறெந்த MESS பெரிய வேத சாஸ்திர பள்ளியில் பட்டம் பெற்றவர். அவர் இன்னின்ன இடத்தில் படித்து நான்கு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவர் ஜனங்களிடம் நன்றாக பழகுவார்” என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றனர். அதெல்லாம் நல்லது தான், அதற்குரிய இடமுண்டு. ஆனால் சபையானது பரிசுத்த ஆவியினால், அவருடைய ஆவியினால், வழி நடத்தப்பட வேண்டுமென்பது தேவனுடைய முறையாகும். ஆனால் அவர்களோ,“நாங்கள் இந்த பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கிறோம். நாங்கள் அக்காலத்தில், முதலில் சிறுபான்மையோராய் தொடங்கினோம். அது நாளடைவில் வளர்ந்து, இப்பொழுது அது மிகப்பெரிய ஸ்தாபனங்களில் ஒன்றாகத் திகழும் நிலையை அடைந்துவிட்டது. எங்களுக்கு மிகச் சிறந்த வேத சாஸ்திர பள்ளிகளும், ”கல்வி கற்ற மிகச் சிறந்த போதகர்களும் உள்ளனர். சிறப்பாக உடை உடுத்தும் ஜனங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம். நகரத்திலுள்ள மிகச் சிறந்த அறிவாளிகள் எங்கள் ஸ்தாபனத்துக்கு தான் வருகின்றனர். நாங்கள் நன்கொடை தருகிறோம். அநேக நல்ல காரியங்களைச் செய்கிறோம்'' என்று பெருமையடித்துக் கொள்கின்றனர். அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை - அதற்கு விரோதமாக நான் ஒரு வார்த்தையும் பேசாதபடிக்கு தேவன் என்னைக் காப்பாராக. இவையெல்லாம் நல்லது தான். இருப்பினும் மனிதன் மனிதனை ஆளுவது தேவனுடைய சித்தமன்று. 29மனிதனுடைய இருதயங்களை ஆளவும், அவனுடைய வாழ்க்கையில் ஆளுகை செய்யவும், தேவன் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியை அனுப்பினார். மனிதன் மனிதனை ஆளுதல் தேவ நியமம் அல்ல. இருப்பினும் அதை நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஒரு பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்திருத்தல் தலைசிறந்த ஒரு செயல் என்னும் கருத்தை நாம் உடையவர்களாயிருக்கிறாம். ''நீங்கள் கிறிஸ்தவரா?“ அதற்காகத் தான் நான் இந்த பொருளைத் தெரிந்து கொண்டேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது, யாராகிலும் ஒருவரை, ''நீங்கள் கிறிஸ்தவரா?'' என்று கேட்கும் போது, ''நான் இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்தவன்'' என்று விடையளிப்பார். “நீங்கள் கிறிஸ்தவரா?'' “நான் இன்னின்ன ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்'' ''நீர் ஒரு கிறிஸ்தவரா?'' நான் படுக்கையில் வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருந்த போது, நர்ஸ் அங்கு வந்தாள். அவள், “எப்படியிருக்கிறீர்கள்? உடல் பரிசோதனைக்காக வந்துள்ள சங்கை பிரான்ஹாம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்'' என்றாள். நான் “ஆம்'' என்றேன். அவள், “உங்கள் முதுகில் தைலம் தேய்த்து கொடுக்கட்டுமா? உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும்'' என்றாள். நான், “சரி, அப்படியே செய்'' என்றேன். அவள் முதுகைத் தேய்த்துக் கொண்டே, “நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டாள். ஓ, “நான் மிகவும் பழமையான ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்” என்று பதிலளித்தேன். அவள், “அது என்ன ஸ்தாபனம்?'' என்றாள். நான், ''உலகம் உண்டாவதற்கு முன்பே உண்டான ஸ்தாபனம்'' என்றேன். அவள், “ஓ, என்ன... அது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். நான் இன்னின்ன ஸ்தாபனத்தைச் சேர்ந்தவள். அந்த ஸ்தாபனம் தானா அது?” என்றாள். நான், “இல்லை, அம்மணி. உன் ஸ்தாபனம் 200 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கினது. ஆனால் நான் கூறும் ஸ்தாபனமோ, மனித குலத்தை மீட்க இரட்சகர் வருவதைக் கண்டபோது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தபோது தொடங்கினது என்றேன்”. 30அதைக் கேட்டபோது, அவள் என் முதுகைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டாள். தேய்ப்பதற்கு செளகரியமாயிருக்க, நான் இவ்வாறு குனிந்து கொண்டிருந்தேன். (அவள் அருகிலுள்ள கோரிடோனில் வசிக்கிறாள்). நாங்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது அவள், “ஐயா, தேவன் தேவனாயிருப்பாரானால், அவர் இன்றைக்கும் முன் நாட்களில் இருந்தது போல தேவனாயிருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விசுவாசிப்பதுண்டு. என் சபை அதை முற்றிலும் மறுத்த போதிலும், அது உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றாள். நான், “இளம் பெண்ணே, நீ தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவளல்ல” என்றேன். அவள், அவர் முன்பு சுகமளிக்கிறவராயிருந்தால், இப்பொழுதும் சுகமளிக்கிறவராக இருக்க வேண்டும் அல்லவா?'' என்றாள். நான், “என் சகோதரியே, அவர் நிச்சயம் அப்படியிருக்கிறார்” என்றேன். 31மனிதனோ மனிதனை ஆள விரும்புகிறான், மனிதனும் மனிதனால் ஆளுகை செய்யப்பட விரும்புகிறான். தேவன் அவனை ஆளுவதை அவன் விரும்புவதில்லை. எனவே கீசின் குமாரனாகிய இவன் சவுல் என்னும் பெயருடையவன் அவர்களுடைய விருப்பத்துக்கு ஒரு பதிலாக அமைந்திருந்தான். அந்த ராஜ கம்பீரமுடையவன். ஓ, அவன் அவர்களை யுத்தத்திற்கு தலைமை வகித்து நடத்திச் செல்ல முடியும். இருப்பினும் அது தேவன் செயல்படும் முறை அல்ல. தேவன் தம்முடைய விசுவாசமுள்ள தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை வழி நடத்துவதையே விரும்பினார். 32இப்பொழுது இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான சபை காலத்தில் - நாம் செய்ய வேண்டுமென்று தேவன் நியமித்தவைகளுக்கு முற்றிலும் மாறாக நாம் சென்றுவிட்டோம் என்று என் இருதயப் பூர்வமாக நம்புகிறேன். நம்முடைய இரட்சகர் கடைசியாக கூறின வார்த்தைகள் மாற்கு 16-ல் உள்ளது. அவர், நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16:15-18 33பரிசுத்த ஆவியின் தலைமையைத் தவிர்த்து வேறெந்த மனிதனும், கீஸின் குமாரனும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. ஆனால் நாமோ பள்ளிகளை நிறுவியுள்ளோம். வேத சாஸ்திர பள்ளிகளை நிறுவியுள்ளோம். நம்மை திருப்திப்படுத்திக் கொண்டு, உலகிலுள்ள மற்றவரைப் போல் காணப்பட நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டோம். முன்பெல்லாம் பரிசுத்த ஆவியானவர் இந்நாட்டின் தலைவராக இருந்து வந்தார். இந்நாடு முன்பு ஆளுகை செய்யப்பட்டு அவர்கள் சுதந்தர பிரகடனத்தை எழுதின போது அங்கு ஒரு காலி நாற்காலி வைக்கப்பட்டிருந்ததாம். தேவனுடைய குமாரன் அந்த மேசையில் உட்கார்ந்திருந்தார் என்பதைக் குறித்து என் மனதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இந்த நாடு மார்க்க சம்பந்தமான சுதந்திரம், எல்லாருக்கும் சுதந்திரம், தேவனுடைய நித்திய வார்த்தை, என்னும் அடிப்படையில் நிறுவப்பட்டது. ஆனால் அதை நாம் அரசியல் காரணமாகக் கெடுத்துவிட்டோம். வாங்குதல், விற்பனை, பொய்யான வாக்குறுதிகள் இவைகளை நம்பி ஒரு மனிதனுக்கு நாம் ஓட்டு போட்டு, அதன் விளைவாக நமது நாடு, நமது அரசியல், நமது ஜனநாயகம் மாசுபட்டு, இப்பொழுது அது கம்யூனிஸத்துடனும், மற்றெல்லா விதமான தத்துவங்களுடனும் ஒன்றாக இணைந்துள்ளது. 34முன்பெல்லாம் 'லீக் ஆப் நேஷன்ஸ்' (League of Nations) கூடி விவாதிப்பதற்கு முன்பு அநேக முறை ஜெபம் செய்வது வழக்கம். ஆனால் அண்மையில் ஒரு முறையாவது அவர்கள் ஜெபம் செய்ய அழைக்கப்படவில்லை. நாம் எப்படி ஜெபமின்றி கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண முடியும்? பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலின்றி நாம் எப்படி உலகில் எந்த பாகத்திலும் ஏதாவதொன்றைச் செய்ய முடியும்? இதை நான் நம் நாட்டுக்கும் அதன் கொடிக்கும், அது நின்று கொண்டிருக்கும் குடியரசு கொள்கைக்கும் அன்புடனும் மரியாதையுடனும் கூற விரும்புகிறேன். நாம் நமது தலைவராகிய பரிசுத்த ஆவியைப் புறக்கணித்துவிட்டோம். நம்முடைய சீர்கெட்ட - அரசியலின் மூலம் சீர்குலைந்த சிந்தையுடைய ஒருவரை உள்ளே கொண்டு வந்துவிட்டோம். நீங்கள் கவனமாயிராமல் போனால், அவர்கள் இப்பொழுது, இதுவரை செய்யாத மாபெருந் தவறைச் செய்யப் போகின்றனர். ஏனெனில் ஜனங்கள் மனிதன் ஆள வேண்டுமென்று விரும்புகின்றனர். 35இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரில் நமக்குத் தேவையான ஜனாதிபதி, காங்கிரஸில் நமக்குத் தேவையானவர்கள், நீதிமன்றங்களில் நமக்குத் தேவையானவர்கள் யாரெனில், தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்து, பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அவருடைய தெய்வீக நடத்துதலினால் வழி நடத்தப்படுகிறவர்களே. ஆனால் அதற்குப் பதிலாக நாம் அறிவாளிகளை, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களை, நாத்தீகர்களை, சில சமயங்களில் அதைவிட மோசமானவர்களை நாம் தேர்ந்தெடுத்து, நம் அரசியல் ஆதிக்கத்தில் அப்படிப்பட்டவர்களை நுழைத்துவிட்டோம். அது மாத்திரமல்ல, நம் சபைகளிலும் கூட. சபைகள் சீர்குலையக் காரணம், நம்மை நடத்துவதற்கு அவசியமான மேய்ப்பர்களை தெரிந்து கொள்ளும் விஷயத்தில், நாம் வேத சாஸ்திரப் பள்ளிகளுக்குச் சென்று பெரிய அறிவாளிகளை, நுண்ணறிவு படைத்தவர்களை, அதிகம் படித்தவர்களை, ஜனங்களுடன் மிகவும் நன்றாகப் பழகுபவர்களை, சுற்று வட்டாரத்திலுள்ள மிகப் பெரியவர்களைத் தெரிந்துக் கொண்டுவிட்டோம். அதற்கு விரோதமாக கூறுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை, தங்கள் வழிகளில் மிகவும் தயவுள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்கள், மற்றவர்களினிடையே நன்றாக நடந்து கொள்ளுபவர்கள், தங்கள் உத்தியோகத்தில் மிகப் பெரியவர்கள் - அதற்கு விரோதமாக நான் எதையும் கூறவில்லை. என் ஆவி அவ்வளவு பொல்லாததாக இராதபடிக்கு தேவன் காப்பாராக. இருப்பினும், தேவன் நமக்கென்று தெரிந்து கொண்டு அளித்தது அதுவல்ல! அது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் - மனிதனின் இருதயத்தில் கிறிஸ்து வாசம் செய்தல். 36நமது பிரசங்க பீடங்களில் நிற்கும் அறிவாளிகளில் பலர், பரிசுத்த ஆவி இருக்கிறார் என்பதையே மறுதலிக்கின்றனர். அவர்களில் பலர் தெய்வீக சுகமளித்தல் உண்டு என்பதையும் ஆவியின் வல்லமையையும் மறுதலிக்கின்றனர். 37நேற்று ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அது ஜாக் கோ என்பவரைக் குறித்து செய்தித்தாள்களில் வெளியான தொடர் கட்டுரை. காலஞ் சென்ற ஜாக் கோ - நான் கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவர். அவர் தன் காலத்தில் பராக்கிரமசாலியாய் விளங்கினார். அவர் நடத்தின கூட்டங்களில் ஒன்றில் ஊனமுற்ற ஒரு சிறு பிள்ளையிடம், கால்களில் இருந்த இறுக்கியை (braces) கழற்றி மேடையின் மேல் நடக்கச் சொன்னதற்காக ஃபிளாரிடா நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார். அந்தப் பிள்ளை அப்படிச் செய்தபோது சாதாரணமாக நடந்தது. ஆனால் தாயை அடைந்தபோது அது விழுந்துவிட்டது - இது அனைத்தும் கிறிஸ்துவின் சத்துரு புரிந்த செயல். இந்த இளம் பெண்ணும் அவளுடைய கணவனும் நம்முடைய தீரமான சகோதரனை தேசத்தின் நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டனர். ஒவ்வொரு சபையும், இயேசு கிறிஸ்துவின் பெயரை உச்சரிக்கும் சபையோர் ஒவ்வொருவரும் சகோ. ஜாக்கை ஆதரித்திருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடும் ஒவ்வொரு மனிதனும் முழங்காலில் நின்று ஜெபித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக சகோ. ஜாக்கோவை குற்றஞ்சாட்டி சிறையில் அடைப்பதற்கென நமது மிகப் பெரிய ஸ்தாபனங்களில் ஒன்று நாத்தீகர்களுடன் சேர்ந்து கொண்டதாக செய்தித்தாளின் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. கிறிஸ்துவின் நாமத்தை உரைக்கும் ஒரு சபை, நாத்தீகனுடன் கூடிக் கொண்டு, வேதத்துக்கென உண்மையாக நிற்க வேண்டுமென்று தன் முழு இருதயத்தோடும் பிரயாசப்படும் தேவ பக்தியுள்ள மனிதன் ஒருவரை குற்றஞ்சாட்டுவதை நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அவர்கள் அப்படி செய்தார்கள். 38சகோ. கார்டன் லின்ட்சே அவரைக் காப்பாற்றச் சென்றார். தேவனை விசுவாசிக்காத அந்த நீதிபதி, ''இந்த மனிதன் மோசடிக்காரர். அவர் மருத்துவரின் ஆலோசனைக்கு எதிராக பிள்ளையின் கால்களிலிருந்த இறுக்கிகளைக் கழற்றி, மேடையின் மேல் நடக்கச்செய்து, அது குணமடைந்துவிட்டது என்று பொய் சொன்னதால் அவருக்கு எதிராக மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என்றார். திரு. கோ எழுந்து நின்று, ''ஐயா, அதை நான் மறுக்கிறேன். தேவன் அந்தப் பையனை குணமாக்கினார்'' என்றார். அப்பொழுது நீதிபதி, “தேவன் அந்த பையனை மேடையின் ஒரு முனையில் குணமாக்கிவிட்டு, மறுமுனையில் மறுபடியும் வியாதிப்படச் செய்வாரா என்று நீதிமன்றத்திலுள்ள எவரையாகிலும் கேட்டுப் பார்க்கிறேன். திரு. கோவின் வாக்குமூலம் வேதப்பிரகாரமாக நிரூபிக்கப்படுமானால், அவர் அவ்வாறு கூற உரிமையுண்டு'' என்றார். ஒரு போதகர் கையுயர்த்தி, ''நீதிபதியவர்களே, இதை நான் கூறலாமா?'' என்றார். நீதிபதி, “சொல்லுங்கள்” என்றார். 39போதகர் எழுந்து நின்று, ''ஒருநாள் கடல் கொந்தளித்த போது, ஒரு சிறு படகு மூழ்கும் தருவாயில் இருந்தது. அதைக் காப்பாற்றலாம் என்னும் நம்பிக்கை அறவே போய்விட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய இயேசு தண்ணீரின் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அப்பொழுது பேதுரு என்னும் பெயர் கொண்ட அப்போஸ்தலர்களில் ஒருவன், “ஆண்டவரே, அது நீரேயானால், நான் தண்ணீரின் மேல் நடந்து வரும்படி கட்டளையிடும்'' என்றான். அவன் சொன்னான்... அப்பொழுது கர்த்தர் அந்த சீஷனிடம், ''நடந்து வா'' என்றார். ஐயா, அவன் படகிலிருந்து இறங்கி, இயேசு தண்ணீரின் மேல் நடந்தது போல அவ்வளவு நன்றாக நடந்துச் சென்றான். ஆனால் அவனுக்கு பயமுண்டான போது, அவன் இயேசுவை அடையும் முன்பு தண்ணீரில் அமிழ்ந்து போகத் தொடங்கினான்'' என்றார். நீதிபதி, “வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்றார். 40நமக்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் அவசியம் - அறிவாளிகள் அல்ல. கீஸின் குமாரனாகிய சவுல் ஜனங்களின் தலைவனாக நியமிக்கப்பட்டான். அவன் 2000 பேர்களைத் தெரிந்து கொண்டான், யோனத்தான் 1000 பேர்களைத் தெரிந்து கொண்டான். யோனத்தான் தாணையத்துக்குச் சென்று ஒரு கூட்டம் எமோரியரை - இல்லை, அம்மோனியர்களைக் கொன்று போட்டான். அவன் கொன்று போட்ட பின்பு, சவுல் எக்காளம் ஊதி, ''சவுல் என்ன செய்தான் பார்த்தீர்களா?“ என்றான். அவனுக்குப் பெருமை உண்டாகத் தொடங்கினது. ஒரு மனிதன் வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெறும் போது, அல்லது அவனுடைய பெயருக்குப் பின்னால் சேர்க்க சில பட்டங்களைப் பெறும் போது, அவன் ''எல்லாம் தெரியும்“ என்னும் நிலையையடைந்து பெருமை கொள்கிறான். தேவனுடைய மனிதர் தாழ்மையுள்ளவர்கள். தேவனுடைய ஜனங்கள் தாழ்மையுள்ளவர்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக ஒருவர் கூறிக் கொண்டு, அதே சமயத்தில் விசுவாசத்தைப் பெறாதவர்களாய் தங்களைப் பிரித்துக் கொண்டு, தங்களுக்கு இல்லாத ஒன்றை இருப்பது போல் பாவித்து நடந்து கொள்வதை நீங்கள் காணும் போது, அவர்கள் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்று புலனாகிறது. 41பிறகு சத்துரு வந்து, தேவனுடைய ஜனங்களுக்குள் நுழைந்து, அவர்கள் ஒவ்வொருவரின் வலது கண்ணையும் பிடுங்க முயன்றதாக நாம் காண்கிறோம். அதைத்தான் சத்துரு எப்பொழுதும் செய்ய முயல்கிறான். ஜனங்கள் காணக்கூடாதென்று கருதி, கூடுமானால் அவர்களுடைய இரு கண்களையுமே பிடுங்கிப் போட முனைகிறான். இன்றைக்கு சாத்தான் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அதைத்தான் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறான் அவன் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை ஏற்றுக் கொள்ளாமல் அறிவினால் விளைந்த கருத்துக்களை பின்பற்ற வேண்டுமென்று கருதி, அவனுடைய ஆவிக்குரிய பார்வையைப் பிடுங்கிப்போட முனைகிறான். ஆதலால் அவர்கள் அதைச் செய்து, யுத்தத்தில் எதிரிகளுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டபோது, சவுல் இரண்டு காளைகளைக் கொன்று எல்லா ஜனங்களுக்கும் அனுப்பினான். இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். சவுல் காளையைத் துண்டாக வெட்டி இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் அனுப்பி, “சாமுவேலின் பின்னாலேயும் சவுலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ இந்த காளைக்கு செய்யப்பட்டதே அதே போல் அவனுடைய மாடுகளுக்கும் செய்யப்படும்'' என்றான். அவன் எவ்வளவு வஞ்சகமாக தன்னை தேவனுடைய மனிதனுடன் இணைத்துக் கொண்டான் என்று பார்த்தீர்களா? அது எவ்வளவு கிறிஸ்தவத் தன்மை அற்ற ஒரு செயல்! சாமுவேலின் நிமித்தமே ஜனங்களுக்கு பயமுண்டாயிருந்தது. ஜனங்கள் சாமுவேலுக்கு பயந்திருந்தார்கள் என்பதனால், அவர்கள் தன்னையும் பின்பற்றும்படி சவுல் செய்தான். ''அவர்கள் சாமுவேலையும் சவுலையும் பின்பற்றட்டும்” என்றான். 42இன்றைக்கு எத்தனை முறைகள் நாம், ''நாங்கள் பெரிய சபை“, ”நாங்கள் கிறிஸ்துவின் சபை'', ''நாங்கள் தேவ சபை'', ''நாங்கள் இன்னார் இன்னார் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்?“ அதைக் கேட்கும் போது, தேவன் உண்மையில் அங்கு தான் கிரியை செய்கிறார் என்னும் பயம் ஜனங்களுக்கு ஏற்படுகிறது. அவர்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை விரும்புவதில்லை, அவர்கள் அந்த விதமாக ஒரு மனிதனைப் பின்பற்ற விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். அவர்கள் எதை விசுவாசிக்க வேண்டுமென்று எண்ணுகின்றனரோ, அதையே விசுவாசிக்க விரும்புகின்றனர். பரிசுத்த ஆவியே நம்முடைய நியாயாதிபதி என்பதை நீங்கள் காண்கிறீர்களா? நமக்கு நியாயாதிபதியாக தேவன் ஒரு போப்பையோ, அல்லது பேராயரையோ அல்லது வேறொவரையோ தரவில்லை. பரிசுத்த ஆவியே, பரிசுத்த ஆவியின் உருவிலுள்ள தேவனே நமது நியாயாதிபதியும் நமது வழிகாட்டியுமானவர். 43ஏன் அப்படி? இப்பொழுது நான் கூறவிருக்கும் கொடூரச் சொற்களுக்காக என்னை மன்னிக்கவும். அதைக் கீழ்த்தரமானதாக்கிக் கூற நான் விழையவில்லை. அதை அன்பினால் கூறுகிறேன். பெண்கள் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல் தவறென்று பரிசுத்த ஆவி உரைக்கிறார். நமது ஸ்திரீகள் குட்டை கால்சட்டைகள், தளர்ந்த கால் சட்டைகள் (slacks) அணிவதும், தங்கள் உதடுகளுக்கும் முகத்திற்கும் சாயம் பூசிக் கொள்வதும் தவறு ஆகும். அது தவறு என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகின்றார். ஆனால் அப்படிச் செய்வதனால் பரவாயில்லை என்று மனிதன் நமக்குக் கூற வேண்டுமென்று விரும்புகிறோம். “நீங்கள் என்னையும் சாமுவேலையும் பின்பற்றும் வரைக்கும், அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆறு நாட்களும் வாழ்ந்து, ஞாயிறு காலை சபைக்குச் செல்ல விரும்புகின்றனர். அங்கு ஒரு சிறந்த அறிவாளி, கல்லூரியில் படித்து நிறைய பட்டங்கள் பெற்றவர் அவர்களுக்கு ஒரு சிறு பிரசங்கம் செய்து அவர்கள் காதுகளைக் குடைந்து, அவர்களுக்கு பொழுதுபோக்காக அமையும் சினிமாகாட்சி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போன்ற சில நகைச்சுவை துணுக்குகள் அதில் இருக்கும். பிறகு ஒரு சிறு ஜெபம் செய்து, அவர்கள் தங்கள் மார்க்கத்தைக் கடைபிடித்துவிட்டனர் என்னும் திருப்தி கொண்டவர்களாய் அவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அது பரிசுத்த ஆவியின் சித்தமன்று. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நீங்கள் தேவ பக்தியுள்ளவர்களாய், உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களைப் பிரித்துக் கொண்டு வாழ வேண்டுமென்பதே பரிசுத்த ஆவியின் விருப்பம். ஆனால் சபைக்கு அது வேண்டாம். ஒரு மனிதன் தங்கள் விருப்பத்துக்கேற்ப வேதாகமத்துக்கு அர்த்தம் உரைத்து அதை கேட்பதையே அவர்கள் விரும்புகின்றனர். வேதாகமத்தின் மூலம் பேசும் பரிசுத்த ஆவியின் சத்தத்துக்கு அவர்கள் செவிகொடுக்க மறுக்கின்றனர். 44அவர்களில் பலர், “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று போதிக்கின்றனர். அப்படிப்பட்ட போதனை ஜனங்களை மகிழ்விக்கிறது. அவர்கள், “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடையாது” என்று போதிக்கின்றனர். உலகம் நடந்து கொள்வதைக் காட்டிலும் வித்தியாசமாக நடந்து கொள்ள இவர்கள் பிரியப்படுவதில்லை. பெண்கள் கழுவின முகங்களுடன் தெருக்களில் செல்லவும், ஆண்கள் மற்றவர்கள் செய்வது போல் வாயில் சிகரெட், சுருட்டு, 'பைப்' எதுவும் வைத்துக் கொள்ளாமல் சுத்தமான முகத்துடன் செல்லவும், பெண்கள் தலைமயிர் கத்தரிக்காமலும் தங்கள் உடலமைப்பை வெளியே காண்பிக்கும் குட்டை ஆடைகள் அணியாமல் செல்லவும் பிரியப்படுகிறதில்லை... “அப்படிச் செய்வதனால் பரவாயில்லை'' என்று தங்களிடம் கூறும் மனிதரையே அவர்கள் - அவர்கள் விரும்புகின்றனர். 45அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னிடம் வந்து, நான் ஒரு பெரிய ஸ்தாபனத்துக்கு விரோதமாக பிரசங்கித்த காரணத்தால், ஐந்து ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து, “நாம் சகோ. பிரான்ஹாமை நீக்கி விடுவோம். இனிமேல் அவருடன் எந்தத் தொடர்பும் வைக்கமாட்டோம். அவர் அந்த ஒலிநாடாக்களை எல்லாரிடமிருந்தும் திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்கிவிடுவோம்'' என்று தீர்மானம் செய்ததாகக் கூறினார். நான், ''என் வாழ்க்கையில் உள்ள அனைத்தும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும், நான் தேவனுடைய வார்த்தையில் நிற்பேன். நான் வார்த்தையில் நிலைத்திருப்பேன். நான்...'' என்றேன். அவர், “நீங்கள் இன்னின்ன ஒலிநாடாவை எல்லோரிடமிருந்தும் வாபஸ் பெற்றுக் கொள்ளமாட்டீரா?” என்றார். நான், “நான் வெட்கப்படும்படியான எதையுமே என் வாழ்க்கையில் பிரசங்கித்ததில்லை. நான் எந்த ஒலிநாடாவையும் ஒலிப்பதிவையும் வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. பரிசுத்த ஆவி கூறினதில் நான் நிலைத்திருந்து, அதன்படி வாழ்ந்து அதில் மரிப்பேன்” என்றேன். என்னைக் குறித்து நான் பெருமையாகப் பேசிக் கெள்ளவில்லை, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, என்ன நடக்கிறது என்பதைக் குறித்து உதாரணமாக ஒன்றை எடுத்துக் கூறினேன். ஜனங்கள் மனிதனால் வழிநடத்தப்பட விரும்புகின்றனர். 46அவர்களுக்கு சாமுவேலை பிடிக்கவில்லை. அவர்கள் சாமுவேலை ராஜாவாக - மன்னிக்கவும், சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் முன்பு, சாமுவேல் அவர்களிடம் மறுபடியும் வந்தான். அவன் இன்றைய மொழியில் எப்படி கூறியிருப்பான் என்று உங்களிடம் பேசிக் காண்பிக்க விரும்புகிறேன். அவன், “தேவன் உங்கள் ராஜாவாயிருப்பதனால் உங்களுக்கு என்ன?'' என்று கேட்டான். “நல்லது, நாங்கள் தேவனைக் காண்பதில்லை''. சாமுவேல், “நான் தான் அவருடைய பிரதிநிதியாக இருக்கிறேனே. நான் தவறான எதையாவது உங்களிடம் கூறியிருக்கிறேனா? நான் தீர்க்கதரிசனம் உரைத்த எதுவும் இதுவரைக்கும் நான் உரைத்தபடியே நிறைவேறாமல் இருந்ததுண்டா? நான் கர்த்தருடைய வார்த்தையை உங்களிடம் உரைத்ததில்லையா? உங்களை ஒன்று கேட்கிறேன். நான் எப்பொழுதாவது உங்களிடம் வந்து பணம் கேட்டு கெஞ்சினதுண்டா? உங்கள் பொருளை நான் எப்பொழுதாவது அபகரித்திருக்கிறேனா? கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைத் தவிர வேறெதாகிலும் நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேனா? அது சத்தியமென்று தேவன் ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார் அல்லவா? அவர் இடியும் மழையும் அனுப்பினாரே” என்றான். அந்த வேத பாகம் உங்களுக்குத் தெரியும் - சாமுவேல் தேவனுடைய வாயாக விளங்குகிறான் என்பதை நிரூபிக்க. ஆகவே சாமுவேல் பரிபூரணமாக பிரதிநிதித்துவமாகயிருந்தது போல, இன்றைக்கு, அந்த பரிசுத்த ஆவியானவர். வேதாகமம் சரியாக எதை உரைக்கின்றதோ, வேதாகமம் எதை கூறுகிறதோ அதை விசுவாசித்து, அதிலிருந்து ஒரு சிறிதும் விலகாமல் சரியாக அதையே கூறும் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வாயாகும். ஆனால் அவர்களோ அவர்களுக்கு வித்தியாசமாய் எடுத்துக் கூறும் யாராகிலும் ஒருவரையே விரும்பினர். 47சாமுவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போகவில்லை என்று ஜனங்களால் கூற முடியவில்லை. அவர்கள் பிரதியுத்தரமாக, “சாமுவேலே, நீர் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தவை அனைத்தையும், நீர் உரைத்தபடியே கர்த்தர் நிறைவேறப் பண்ணினார். அதில் சிறு பிழை கூட இருக்கவில்லை. நீர் எங்களிடம் வந்து பணத்துக்காக கெஞ்சவில்லை. உம் தேவைகளை நீரே சந்தித்துக் கொண்டீர். உமக்காக பெரிய காரியங்கள் ஒன்றையும் செய்யும்படி எங்களிடம் நீர் கூறவில்லை. உமது தேவன் மேல் நீர் நம்பிக்கையாயிருந்தீர், அவரும் உம்மை எல்லா பொல்லாப்பினின்றும் விடுவித்தார். உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை - நீர் கர்த்தருடைய நாமத்தில் உரைத்த எல்லாமே, நீர் உரைத்தபடியே நிறைவேறின. இருந்தபோதிலும், எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்'' என்றனர். 48முரண்பாட்டை உங்களால் காணமுடிகிறதா? ஒரு மனிதன் மேல் பிசாசு எவ்வாறு தந்திரமுள்ளதாய் கிரியை செய்ய முடியும் என்பதை உங்களால் காண முடிகிறதா? பரிசுத்த ஆவிக்கு அவனையோ அல்லது அவளையோ ஒப்புக்கொடுத்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்குச் செவி கொடுத்து, தூய வாழ்க்கை வாழ்ந்து, விசேஷித்த ஜனமாக, பரிசுத்த ஜாதியாக, வினோதமாய் நடந்து கொள்ளும் ஜனமாக இருப்பதற்கு பதிலாக, அவர்கள் உலகத்துடன் இணைந்து, உலகத்தைப் போல் நடந்து, ஏதோ ஒரு சபைக்கு சென்று, ''அதனால் பரவாயில்லை. நாம் இப்படியே நடந்து, சென்று கொண்டிருப்போம்“ என்கின்றனர். அது என்னவென்று உங்களால் காணமுடிகிறதா? அவர்கள், ''தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையாது. ஓ, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது சபைக்கு அளிக்கப்பட்ட திட்ட வரம்பு (frame work) மாத்திரமே'' என்கின்றனர். வேறு விதமாகக் கூறினால், தேவன் மனிதரை தெரிந்து கொண்டு, பரிசுத்த ஆவியை சபையிலிருந்து எடுத்துப் போட்டு, ஸ்தாபனம் அதைக் கட்டும்படி செய்துவிட்டார் என்பது அவர்கள் கருத்து. இல்லை, இல்லை. அப்படி ஒருபோதும் இல்லை. இயேசு வரும்வரைக்கும், பரிசுத்த ஆவி, சத்திய வார்த்தை நம்மை நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் போக்கில் சென்றுவிட்டனர். 49சவுல் ஆதிக்கத்துக்கு வந்தான். அவனை அநேகர் பின் தொடர்ந்தனர். ஓ, அவனுக்கு அழகான போராயுதங்கள் இருந்தன. அவனுக்கு பாடகர்கள் இருந்தனர், கேடயங்கள் இருந்தன, ஈட்டிகள் இருந்தன. ஓ, அவன் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். அவன் அதுவரை மற்ற எவரும் கேட்டிராத அளவுக்கு சிறந்த ஜனநாயக முறையைக் கொண்டு வந்தான். அதைத்தான் இன்று நமது ஸ்தாபனங்களும் சபைகளும் செய்துள்ளன. நமக்கு உலகிலேயே மிகப்பெரிய சபை கட்டிடங்கள் உள்ளன. உலகிலேயே மிகச் சிறப்பாக அழகாக உடுத்துபவர் நம்மிடையே உள்ளனர். சிறந்த கல்வி கற்றவர்கள் நமக்கு உள்ளனர். பயிற்சியளிக்கப்பட்ட சவுலின் மனிதர் அந்த ஈட்டியை எடுத்து அதை அசைக்கவும், நாடுகள் அவர்களுக்கு பயந்து நடுங்கும் விதத்தில் அந்த ஈட்டியைக் கழற்றி அசைத்தது போல. ஆனால் ஒருநாள் சவால்விடும் ஒருவன் புறப்பட்டு வந்தான். அது இஸ்ரவேல் சேனை முழுவதற்குமே பயமுண்டாக்கி அவர்களை தங்கள் பாதணிகள், ஷூக்களுக்குள்ளாகவே நடுநடுங்கச் செய்தது. கோலியாத் அவர்களுக்கு சவால்விட்டான். அவன், ''நீங்கள் கூறுவது போல் உங்கள் தேவன் இருப்பாரானால், நீங்கள் தான் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவர்களாய் இருக்கவேண்டும்“ என்று சொல்லி அவர்களுக்கு சவால் விட்டான். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களுடைய சிறந்த, தீட்டப்பட்ட போராயுதங்கள் கிரியை செய்ய முடியவில்லை. அவர்களுடைய ஈட்டிகள் இயங்கக்கூட முடியாதிருந்தது. அவர்கள் இதற்கு முன்பு கேட்டிராத ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. 50நான் எல்லா பயபக்தியோடும், தேவ பக்தியோடும், கனத்தோடும், மரியாதையோடும், அன்போடும் அதைக் கூறுகிறேன். அன்றொரு நாள் நான் ஆப்பிரிக்கச் செய்தித்தாள் ஒன்றில் நமது கீஸின் குமாரனாகிய சுவிசேஷகருக்கு - பில்லி கிரகாமுக்கு - ஒரு முகமதியன், “உன் தெய்வம் தேவனானால், அவர் கூறியுள்ளது போன்று வியாதியஸ்தர்களை சுகப்படுத்தட்டும்'' என்று சவால் விட்டதாகக் கண்டேன். கீஸின் குமாரன் தன் சேனைகளுடன் அமைதியாகி, அவர்கள் தோல்வியடைந்தவர்களாக அந்நாட்டை விட்டுப் புறப்பட்டனர். அது பெருத்த அவமானம்! நமது தேவன் தேவனாயிருக்கிறார்! நமக்கு நமது நல்ல சபைகள் உள்ளன, நமக்கு நமது அருமையான சுவிசேஷகர்கள் உள்ளனர், நமக்குச் சிறந்த பாடற்குழுக்கள், மிக உயர்ந்த கோபுரமுள்ள ஆலயங்கள், சிறந்த மனிதர், நிறைய பணம் எல்லாமே உள்ளன. நமக்கு அறிவாளிகள் உள்ளனர். நமக்கு வேதசாஸ்திரம் ஓரளவுக்கு உள்ளது. அதை நாம் பிரசங்கம் செய்யலாம். நாம் சுவிசேஷம் போதித்து ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கானவர்களை நமது மார்க்கத்துக்கு கொண்டு வந்து சபையில் சேர்க்கலாம். (ஒலிநாடாவில் காலி யிடம் - ஆசி) இருப்பினும், ஊதியம் பெறும் பாடகர்கள், சிறந்த அறிவாளிகளான சுவிசேஷகர் இவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு சவாலை எப்படிச் சந்திப்பதென்று தெரியவில்லை. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. தேவனுடைய சுகமாக்கும் வல்லமை, பரிசுத்த ஆவியின் வல்லமை, புற்றுநோயால் மரித்துக் கொண்டிருக்கும் ஒருவனின் நிழலைப் போக்கி அவனை அதிலிருந்து விடுவிக்கும் வல்லமை போன்றவைகளைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. அவர்களுக்கு சவுலும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அவனுடைய குழுவைப் போல, இதில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கப்படவில்லை. 51ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கும், பிள்ளைகளாகிய உங்களுக்கும் நான் கூற விரும்புவது என்னவெனில், இதை நான் கூறட்டும். தேவன் உங்களுக்கு சாட்சியை வைக்காமல் போனதில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அது சவுலுக்குத் தெரியாது. சவுலுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் தேவன் மலைக்குப் பின்னால் ஒரு சிறு தாவீதை வைத்திருந்தார். அவன் தன் ஆடுகளை மார்க்க சம்பந்தமான புல்லினால் போஷிக்கவில்லை. அவன் அவைகளை அமர்ந்த தண்ணீரண்டைக்குக் கொண்டு சென்று, பசுமையான புல்லுள்ள இடங்களில் மேய்த்தான். அவன் தன் தகப்பனின் ஆடுகளின் மேல் கண்ணோக்கமாயிருந்து, அவைகளில் ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓட ஏதாவதொன்று (சத்துரு) வந்தபோது, அந்த ஆட்டை விடுவிக்கத் தக்க தேவனுடைய வல்லமையை அவன் அறிந்திருந்தான். தேவனுடைய வல்லமையினால் தேவனுடைய ஆடு ஒன்றை எப்படி விடுவிப்பது என்று அறிந்துள்ள தாவீதை தேவன் இன்றைக்கும் எங்காவது ஓரிடத்தில் கொண்டிருக்கிறார். அந்த தாவீது இப்பொழுதும் அதைக் குறித்து எல்லாம் அறிந்திருக்கிறான். அவன் நம்பிக்கை கொண்டிருந்தான்... அவனுக்கு சவுலின் போராயுதங்களைக் குறித்து ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு அவையொன்றும் அவசியமில்லை. அவனுக்கு அவர்களுடைய ஸ்தாபனங்கள் ஒன்றும் தேவையில்லை. அந்த பழைய போர்க்க் கவசங்களை அணிந்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவன், “இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த வல்லமையுடன் நான் போகப் போகிறேன்'' என்றான். 52அவன் தகப்பனின் ஆடுகளைப் போஷித்து வந்தான். அவன் புல்லின் மேல் கவனம் செலுத்தி, அவைகளுக்கு சரியான ஆகாரத்தைக் கொடுத்து வந்ததால், அவை உயிர் வாழ்ந்து நன்றாக வளர்ந்து வந்தன. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. உண்மையான மேய்ப்பன் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்பதனால் அவைகளைப் போஷிக்கிறான். சத்துரு அவைகளில் ஒன்றை வியாதியால் கவ்வினால், அவன் தேவனுடைய வல்லமையை அறிந்திருக்கிறான். அந்தச் சிறு உருவம் படைத்த தாவீது அங்கு நின்று கொண்டிருந்தான். சவுல் அவனிடம், ''அவன் பிறவி முதற்கே போர்வீரன். அவனுடைய இளம் பிராயத்திலிருந்தே அவன் ஈட்டியும் போர்க் கவசமும் தவிர வேறொன்றும் அறிந்திருக்கவில்லை. அவன் நன்கு பயிற்சி பெற்றவன். அவன் வேத சாஸ்திர நிபுணன். உனக்கோ அதைக் குறித்து ஒன்றும் தெரியாதே“ என்றான். தாவீது, “ஐயா, அது உண்மைதான். அவன் பெற்றுள்ள வேத சாஸ்திர பயிற்சியைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். என் தகப்பனின் ஆடுகளில் ஒன்றை சத்துரு வந்து கவ்விச் சென்றபோது, நான் தேவனுடைய வல்லமையுடன் சென்று அதை விடுவித்தேன். நான் நல்ல ஆரோக்கியத்துக்கு அதை திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்தேன். அதை நிழலுள்ள பசும் புல்லுக்கும், அமர்ந்த தண்ணீரண்டைக்கும் திரும்பக் கொண்டு வந்தேன். அந்த சிங்கத்தை என் கைகளில் ஒப்புக் கொடுத்த தேவன் - ஆடுகளில் ஒன்றை அது கவ்வின போது, அதை நான் கொன்று போட்டேன். நான் கரடியைக் கொன்று போடும்படியும் அவர் செய்தார். எனவே விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனையும் கொன்று போடுவதற்கு தேவன் என்னோடு கூட வருவார்'' என்றான். நமக்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் அவசியம். 53என் நாட்கள் எவ்வளவென்று எனக்குத் தெரியாது, யாருக்குமே தெரியாது. அன்றொரு நாள் காலையில் நான் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, ஜோசப் வியாதியாயிருப்பதாவும் அவனுக்காக நான் ஜெபிப்பதாகவும் சொப்பனம் கண்டேன். நான் எழுந்த போது கலக்கமடைந்தேன். ''ஒருக்கால் ஜோசப் வியாதிப்படப் போகிறான்'' என்று எண்ணினேன். எனக்கு முன்னால் ஒரு கறுத்த நிழல், சிறிது பழுப்பு நிறமாக, போவதைக் கண்டேன். அது என்னைப் போல் தோன்றினது. நான் கவனித்த போது, அதற்குப் பின்னால் வெள்ளை நிறமுள்ள ஒருவர் வரக் கண்டேன். அது அவர், என் மனைவிக்கு இத்தரிசனத்தைக் காண்பிக்க எண்ணி அவள் விழித்துக் கொண்டிருக்கிறாளா என்று எட்டிப் பார்தேன். அவளோ உறங்கிக் கொண்டிருந்தாள். நான், “ஓ, கர்த்தாவே, நான் வருந்துகிறேன். அதுவே என் வாழ்க்கையாக இருந்து வந்துள்ளது. நான் இது காறும் புரிந்த ஒவ்வொரு செயலையும் புரியும்படிக்கு நீர் என்னை உந்த வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொன்று நடக்கும் போது, நீரே அதைச் செய்வதாக எண்ணி வந்தேன். ஆனால் அதை நான் செய்யாதபடி தடுக்க சாத்தான் முயன்றான் என்பதை உணருகிறேன். நீர் மாத்திரம் என்னை வழிநடத்துவீரானால்'' என்றேன். நான் பார்த்த போது, இதுவரை நான் கண்டதிலேயே மிகவும் அழகான முகம் கொண்ட ஒரு மனிதனைக் கண்டேன். அவர் எனக்கு முன்னால் நின்று கொண்டு, பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் கரத்தை நீட்டி, என் கரத்தை பிடித்து இந்த பக்கமாக நடக்கத் தொடங்கினார். அந்த தரிசனம் என்னை விட்டகன்றது. சென்ற ஞாயிறு காலை நான் சீக்கிரமாக எழுந்தேன். இந்த தரிசனம் சனிக்கிழமை உண்டானது. 54நான் எப்பொழுதுமே என் மரணத்தைக் குறித்து யோசித்து கவலை கொள்வதுண்டு. எனக்கு ஐம்பது வயது ஆகிவிட்டதால், இன்னும் அதிக நாட்கள் இல்லை... நான் மரிப்பதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை என்று எண்ணினேன். அந்த 'தியோபனி' சரீரத்தில் - வானத்துக்குரிய சரீரத்தில் நான் எப்படி இருப்பேன் என்று வியக்கலானேன். என் விலையேறப்பெற்ற நண்பர்களை நான் வெள்ளைப் பனி உருவத்தில் போகக் கண்டு, “இதோ சகோதரன் நெவில் போகிறார்'' என்று எண்ணி, அவரால், ”ஹலோ, சகோ. பிரான்ஹாம்'' என்று கூறமுடியாதது போல் இருக்குமா? இயேசு வரும்போது நான் மனித உருவை அடைவேன் என்று பலமுறை எண்ணினதுண்டு. நான் மேற்கு பாகத்தில் இருந்ததாகச் சொப்பனம் கண்டேன். நான்... ஒரு புதருள்ள இடத்தின் வழியாக நாங்கள் வந்து கொண்டிருந்தோம். என் மனைவி என்னுடன் இருந்தாள். நாங்கள் 'ட்ரவுட்' (trout) மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் நின்று ஆற்றில் போடப்பட்டிருந்த அணை வாசலை (gate) திறந்தேன். ஆகாயம் மிகவும் அழகாக இருந்தது. இங்குள்ள பள்ளத்தாக்கில் காணப்படுவது போல் அது காணப்படவில்லை. அது நீல நிறமாகவும் அழகான வெள்ளை மேகங்கள் உடையதாகவும் காணப்பட்டது. நான் மனைவியிடம், “தேனே, நாம் நீண்ட நாட்களுக்கு முன்பே இங்கு வந்திருக்க வேண்டும்'' என்றேன். அவள், “ஆம், பில்லி, பிள்ளைகளின் நிமித்தமாவது நாம் இங்கு வந்திருக்க வேண்டும்'' என்றாள். நான் சொன்னேன், ''அது...“ 55“நான் ஏன் அடிக்கடி சொப்பனம் காண்கிறேன் என்று தெரியவில்லை'' என்று வியந்தேன். நான் பார்த்த போது என் மனைவி என் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தாள். உங்களில் அநேகர் செய்வதுபோல், என் தலையணையை உயரமாக வைத்து, தலையை கட்டிலின் தலைமாட்டில் வைத்து, கையைப் பின்னால் நீட்டி, இப்படி படுத்துக் கொண்டு, ”மறுபுறம் எப்படியிருக்குமென்று தெரியவில்லை. எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லை. கர்த்தருக்கு உதவியாக ஏதாவதொன்றை நான் செய்யக் கூடுமானால் நலமாயிருக்கும். நான் மரிக்காமல் இருக்க முடியாதென்று எனக்குத் தெரியும். என் வாழ்நாளில் பாதி கடந்துவிட்டது - பாதியைக் காட்டிலும் கூடுதலாக. என் முன்னோர்களைப் போல் நான் நீண்ட ஆயுசுள்ளவனாக வாழ நேரிட்டாலும், அப்பொழுதும் என் வாழ்நாளில் பாதி கடந்து விட்டது'' என்று எண்ணினேன். நான் சுற்றிலும் பார்த்தேன். நான் படுக்கையை விட்டு எழுந்திருக்க எண்ணி, அங்கு படுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது 7.00 மணியிருக்கும். “என் தொண்டை கரகரப்பாயுள்ளது. எனவே இன்று காலை நான் சபைக்கு சென்று சகோ. நெவில் பிரசங்கிப்பதைக் கேட்பேன்” என்று எண்ணினேன். நான் மனைவியிடம், “தேனே, விழித்திருக்கிறாயா?'' என்று கேட்டேன். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இதை நீங்கள் தவற விட்டுவிட வேண்டாம். இது என்னை மாற்றினது. நான் பழைய சகோ. பிரான்ஹாமாக இனி இருக்க முடியாது. 56நான் பார்த்த போது ஏதோ ஒன்று என்னிடம், ''நீ இப்பொழுது தான் தொடங்குகிறாய். யுத்தத்தில் நெருங்கி முன்னேறு. நெருக்கிக் கொண்டேயிரு'' என்று சொல்லிக் கொண்டிருந்தது. நான் ஒரு நிமிடம் தலையை ஆட்டிவிட்டு, “இது என் சுய சிந்தையாயிருக்க வகையுண்டு. ஒரு மனிதன் சில சமயங்களில் கற்பனை செய்வதுண்டு அல்லவா? அது போல் இதுவும் என் கற்பனையாக இருக்கக் கூடும்” என்று எண்ணினேன். அது, ''யுத்தத்தில் நெருக்கிக் கொண்டிரு! சென்று கொண்டேயிரு, சென்று கொண்டேயிரு'' என்றது. நான், “ஒருக்கால் நானே கூறியிருப்பேன்” என்றேன். என் உதடுகளைக் கடித்துக் கொண்டு, என் வாயை கையினால் பொத்தினேன். அது மறுபடியும், “நெருக்கிக்கொண்டேயிரு. பாதையின் முடிவில் என்ன உள்ளது என்று மாத்திரம் நீ அறிவாயானால்” என்றது. கிரிம் ஸ்னெல்லிங் அல்லது வேறு யாரோ பாடின இந்த பாடலை நான் கேட்பது போல் எனக்கு தோன்றினது. அன்னா மேவும் (Anna Mae) நீங்கள் எல்லோரும் இதை இங்கு பாடியிருக்கிறீர்கள். வீடு சென்று இயேசுவைக் காண வேண்டுமெனும் ஆவல் தோன்றுகிறது. துறைமுக மணிகளின் இனிய ஓசையைக் கேட்க விரும்புகிறேன் அது என் பாதையை பிரகாசமாக்கி என் பயத்தைப் போக்கும் கர்த்தாவே, காலத்திரைக்கு அப்பால் நான் காணட்டும். நீங்கள் அதை இங்கு சபையில் பாடுவதை கேட்டிருக்கிறீர்கள். ஏதோ ஒன்று என்னிடம், ''திரைக்கு அப்பால் காண உனக்கு விருப்பமா?'' என்றது. நான், “அது எனக்கு மிகவும் உதவியாயிருக்கும்'' என்றேன். நான் பார்த்தபோது, ஒரு நொடிப்பொழுதில், ஒரு மூச்சு நேரத்துக்குள், நான் சாய்வான ஒரு இடத்துக்கு வந்துவிட்டேன். நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கு கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன். ''இது விசித்திரமாயுள்ளதே'' என்று எண்ணினேன். 57இப்பொழுது இதை நீங்கள்வேறெங்கும் கூற வேண்டாம். இது என் சபைக்கும், நான் போதகராயுள்ள என் ஆடுகளுக்கு மாத்திரமே. நான் இந்த சரீரத்திலிருந்தேனோ, அல்லது சரீரத்துக்கு புறம்பாயிருந்தேனோ, அது மறுரூபமோ (translation)... அது நான் வழக்கமாக காணும் எந்த தரிசனத்தைப்போல் இல்லை. என்னால் அங்கும் பார்க்க முடிந்தது, இங்கும் பார்க்க முடிந்தது. அந்த இடத்தை நான் அடைந்தபோது, திரளான ஜனங்கள் “ஓ, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று ஆர்ப்பரித்து என்னிடம் ஓடி வந்த அப்படிப்பட்ட காட்சியை நான் கண்டதில்லை ஆகவே நான் பார்த்தபோது, வாலிப பெண்கள், ஏறக்குறைய இருபது வயதிருக்கும் (பதினெட்டு முதல் இருபது வயது) என் மேல் கை போட்டு, “எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று ஆர்ப்பரித்தனர். அங்கு வாலிபர்கள் தங்கள் வாலிபப் பிரகாசத்துடனும், இருண்ட இரவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் போல் ஜொலிக்கும் கண்களையும், முத்து போன்ற வெண்மையான பற்களையும் உடையவர்களாய் என்னை அணுகி, என்னைக் கட்டி அணைத்து, ”ஓ, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று ஆர்ப்பரித்தனர். நான் பார்த்த போது, நானும் வாலிபமாயிருந்தேன். நான் திரும்பி, கைகளை தலையின் பின்னால் வைத்து அங்கே கிடந்த என் வயதான சரீரத்தைப் பார்த்து, “இது எனக்குப் புரியவில்லையே'' என்றேன். இந்த வாலிபப் பெண்கள் தங்கள் கரங்களை என் மேல் போடுதல். 58இது ஆண்களும் பெண்களும் கலந்த கூட்டம் என்பதை உணருகிறேன். இதை நான் ஆவியின் இனிமையோடும் நான் மென்மையோடும் கூற விரும்புகிறேன். மனிதர் ஸ்திரீகள் மேல் கரங்களைப் போடும் போது, உடலுணர்ச்சி பெறாமல் இருக்க முடியாது. ஆனால் அங்கு அத்தகைய உணர்ச்சி ஏற்படவில்லை. அங்கு நேற்று நாளை என்பது கிடையாது. அங்கிருந்தவர்கள் களைப்படையவில்லை. அவர்கள்... அப்படிப்பட்ட அழகுள்ள பெண்களை என் வாழ்க்கையில் கண்டதில்லை. அவர்களுடைய கூந்தல் இடுப்பு வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த நீண்ட பாவாடைகள் பாதங்கள் வரைக்கும் இருந்தது. அவர்கள் என்னைக் கட்டித் தழுவினர். அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் என் சகோதரி என்னை வழக்கமாக கட்டித் தழுவுதல் போன்றதல்ல அது. அவர்கள் என்னை முத்தம் செய்யவில்லை, நானும் அவர்களை முத்தம் செய்யவில்லை. அதை விவரிக்க என்னிடம் போதிய சொற்கள் இல்லை. பரிபூரணம் (perfection) என்னும் சொல் அதை நெருங்கவும் முடியாது. கம்பீரம் (Superb) என்னும் சொல் அதன் அருகில் எங்கும் செல்ல முடியாது. அது நான் இதுவரை... அதை அறிய நீங்கள் அங்கு சென்றால் தான் முடியும். 59நான் இந்தப் புறமாக, அந்தப் புறமாக பார்த்தபோது, அவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர். ''இது எனக்குப் புரியவில்லையே, அவர்கள் ஏன்...“ என்றேன். இதோ என் முதல் மனைவி ஹோப் வந்து கொண்டிருந்தாள். அவள் ஓடி என்னிடம் வந்து, ''என் கணவரே” என்று கூறாமல், அவள் என்னைக் கட்டி அணைத்த போது, ''என் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று கூறினாள். என்னைக் கட்டித் தழுவின மற்றொரு ஸ்திரீ அங்கு நின்று கொண்டிருந்தாள். அதன் பிறகு ஹோப் அவளைக் கட்டித் தழுவினாள். ஒவ்வொருவரும்... “இது வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று...'' என்று எண்ணினேன். ஓ, அந்த பழைய சரீரத்துக்கு நான் மறுபடியும் செல்ல பிரியப்படுவேனோ? நான் சுற்றுமுற்றும் பார்த்து, 'இது என்ன?' என்று நினைத்தேன். நான் மிகவும் நன்றாக அங்கு காணப்பட்டேன். ஆகவே நான் - நான் ”இது எனக்குப் புரியவில்லையே என்று கூறினேன். ஹோப் அங்கு கெளரவமுள்ள விருந்தாளியைப் போல் இருந்தாள். அவள் வேறுவிதமாக இல்லை, கெளரவமுள்ள விருந்தாளியைப் போல் இருந்தாள். 60“பரிசுத்த ஆவி என்று நீ பிரசங்கித்தது இது தான். இதுதான் பூரண அன்பு. அது இல்லாமல் எதுவும் இங்கு வர முடியாது.'' பூரண அன்பு மாத்திரமே அங்கு பிரவேசிக்க முடியும் என்று என் வாழ்க்கையில் முன்னைக் காட்டிலும் அதிக நிச்சயம் எனக்குண்டாயிற்று. அங்கு பொறாமை இல்லை. களைப்பு இல்லை, மரணம் இல்லை. வியாதி அங்கு பிரவேசிக்க முடியாது. அங்கு மானிடத் தன்மை உங்களை வயோதிபராக்க முடியாது. அவர்களால் அங்கு அழ முடியவில்லை. அங்கு “ஓ, என் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்னும் பரிபூரண சந்தோஷமேயிருந்தது. அவர்கள் என்னைக் கொண்டு போய் ஒரு உயர்ந்த இடத்தில் இருத்தினர். ''நான் கனவு காணவில்லை. கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் என் உடலை என்னால் காண முடிகிறது'' என்று எண்ணினேன். அவர்கள் என்னை அங்கு உட்கார வைத்தனர். நான், “ஓ, இங்கு நான் உட்காரக் கூடாது'' என்றேன். இரு பக்கங்களிலிருந்து, வாலிபப் பருவம் பூத்தவர்களாகக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஆர்ப்பரித்துக் கொண்டு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஸ்திரீ, “ஓ, என் விலையேறப்பெற்ற சகோதரனே, ஓ, உங்களை இங்கு காண்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி'' என்றாள். “எனக்கு இதெல்லாம் புரியவில்லை” என்றேன். எனக்கு மேலே பேசிக் கொண்டிருந்த அந்த சத்தம், “தீர்க்கதரிசிகள் தங்கள் ஜனத்தாருடன் சேர்க்கப்பட்டனர் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளதென்று உனக்குத் தெரியும்'' என்றது. நான், “ஆம், அந்த வேத வசனங்கள் எனக்கு ஞாபகமுள்ளது” என்றேன். அது, “உன் ஜனத்தாருடன் நீ சேர்க்கப்படும் போது இப்படித்தான் இருக்கும்'' என்றது. நான், ''அவர்களைத் தொட்டு உணரும் வகையில் அவர்கள் உருவம் கொண்டவர்களாய் இருப்பார்களா?'' என்று கேட்டேன். ''ஓ, ஆமாம்.'' “ஆனால் நான்... இங்கு லட்சகக்கணக்கானவர் உள்ளனர். பிரான்ஹாமின் குடும்பத்தினர் அத்தனை பேர் கிடையாதே'' என்றேன். அப்பொழுது அந்த சத்தம், “இவர்கள் பிரான்ஹாம் குடும்பத்தினர் அல்ல. இவர்கள் உன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள். நீ கர்த்தரிடத்தில் வழி நடத்தியவர்கள் இவர்கள். நீ மிகவும்அழகுள்ளவர்களாகக் கருதும் இந்த ஸ்திரீகள்ளில் சிலர், நீ அவர்களை தேவனிடம் வழிநடத்தின போது தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் ”ஓ, என் விலையேறப் பெற்ற சகோதரனே, என்று ஆர்ப்பரிப்பதில் வியப்பில்லை'' என்றது. அவர்கள் எல்லோரும் ஒன்றாக ''நீர் சென்று பிரசங்கித்திராவிட்டால், இங்கு நாங்கள் வந்திருக்க முடியாது'' என்றனர். 61நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “எனக்குப் புரியவில்லை'' என்று நினைத்தேன். ”ஓ, இயேசு எங்கே? அவரைக் காணத் துடிக்கிறேன்'' என்றேன். அவர்கள், “அவர் இன்னும் சற்று உயரத்தில், அந்த பக்கம் இருக்கிறார். என்றாவது ஒரு நாள் அவர் உங்களிடம் வருவார்'' என்றார்கள். பாருங்கள்? அவர்கள், ”நீங்கள் தலைவராக அனுப்பப்பட்டீர்கள். தேவன் வருவார். அவர் வரும்போது, நீங்கள் மற்றவர்களுக்கு போதித்ததைக் கொண்டு முதலில் உங்களை நியாயந்தீர்ப்பார். அவர்கள் உள்ளே சென்றாலும் செல்லாவிட்டாலும், உங்களுடைய போதகத்தின் விளைவாக நாங்கள் உள்ளே செல்வோம்'' என்றனர். நான், “ஓ, எனக்கு மிக்க மகிழ்ச்சி! பவுலும் கூட இப்படி நிற்க வேண்டுமா? பேதுருவும் கூட இப்படி நிற்க வேண்டுமா? என்று கேட்டேன். ''ஆம்.'' நான், “அப்படியானால், நான் அவர்கள் பிரசங்கித்த ஒவ்வொரு வார்த்தையும் பிரசங்கித்தேன். நான் சிறிது கூட அதிலிருந்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வித்தியாசப்படவில்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்த விதமாக நானும் கொடுத்தேன். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதித்த விதமாக நானும் போதித்தேன். அவர்கள் போதித்த அனைத்தும் நானும் போதித்தேன்'' என்றேன். அப்பொழுது ஜனங்கள் ஆர்ப்பரித்து, ''அது எங்களுக்குத் தெரியும். ஒருநாள் உங்களுடன் நாங்கள் பூமிக்குத் திரும்பச் செல்வோம் என்று அறிந்திருக்கிறோம்'' என்றனர். அவர்கள், இயேசு வருவார், அப்பொழுது நீர் எங்களுக்கு போதித்த வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவீர். அந்த நேரத்தில் நீர் ஏற்றுக் கொள்ளப்படுவீரானால் - நீங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள் - எங்களை உமது ஊழியத்தின் விருதுகளாக அவருக்கு அளிப்பீர். நீர் எங்களை அவரிடம் நடத்திச் செல்வீர். நாம் எல்லோரும் பூமிக்குச் சென்று அங்கு என்றென்றைக்கும் வாழுவோம்'' என்றனர். நான், ''இப்பொழுது நான் பூமிக்கு திரும்பச் செல்ல வேண்டுமா?'' என்று கேட்டேன். “ஆம், ஆனால் நெருக்கிக் கொண்டேயிருங்கள்.'' 62நான் பார்த்தபோது, நான் காணும் தூரம் வரைக்கும் ஜனங்கள் வந்து கொண்டேயிருந்தனர். அவர்கள் என்னைக் கட்டி அணைத்து, ''எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று ஆர்ப்பரிக்க விரும்பினர். அப்பொழுது ஒரு சத்தம், ''நீ நேசித்த அனைத்தும், உன்னை நேசித்த அனைத்தும் தேவன் உனக்கு இங்கு கொடுத்திருக்கிறார்“ என்றது. நான் பார்த்த போது, என் பழைய நாய் நடந்து என்னிடம் வந்தது. என் குதிரையும் வந்து, என் தோளின் மேல் தலையை வைத்து கனைத்தது. அந்த சத்தம், ”நீ நேசித்த அனைத்தும், உன்னை நேசித்த அனைத்தும், தேவன் உன் ஊழியத்தின் மூலம் உன் கரங்களில் கொடுத்திருக்கிறார்“ என்றது. அந்த அழகான இடத்தை விட்டு வருவதற்கு நான் வருத்தப்பட்டேன். நான், ''தேனே,உறக்கத்தினின்று எழுந்துவிட்டாயா?'' என்று கேட்டேன். அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான், ''ஓ, தேவனே, எனக்குதவி செய்யும், ஓ தேவனே. நான் ஒரு வார்த்தையின் பேரிலும் ஒப்புரவாகாதிருப்பேனாக. அந்த வார்த்தையில் உறுதியாக நின்று அதைப் பிரசங்கம் செய்வேனாக. என்ன வந்தாலும் போனாலும், யார் என்ன செய்தாலும், எத்தனை சவுல்கள் கீஸின் குமாரர் எழும்பினாலும், இது, அது மற்றது நிகழ்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. கர்த்தாவே, அந்த இடத்தில் நான் சேரட்டும்'' என்றேன். 63மரண பயம் அனைத்தும்... இந்த காலை வேளையில் எனக்கு முன்பாக வேதாகமத்தை வைத்துக்கொண்டு கூறுகிறேன். நான் வளர்க்க வேண்டிய நான்கு வயது சிறுவன் எனக்கு இருக்கிறான். எனக்கு ஒன்பது வயது பெண்ணும், வாலிப மகனும் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய வழியில் சென்று கொண்டிருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர்களை தேவனுடைய போதனையில் வளர்க்க தேவன் எனக்கு ஜீவனை அளிப்பாராக. எல்லாவற்றிற்கும் மேலாக, முழு உலகமே என்னை நோக்கி ஆர்ப்பரிப்பது போல் தோன்றுகிறது. தொண்ணூறு வயது நிரம்பிய ஸ்திரீகளும் மனிதரும் எல்லா விதமானவர்களும், ''நீர் பிரசங்கம் செய்திராவிட்டால், நாங்கள் இங்கு இருக்கமாட்டோம் என்றனர். தேவனே, நான் யுத்தத்தில் நெருக்கட்டும். நான் மரிக்க நேரிட்டு இங்கு இல்லாமல் போனால்... அது மகிழ்ச்சியாயிருக்கும். இந்த அழிவினின்றும் அவமானத்தினின்றும் விடுதலையாகி அங்கு பிரவேசிப்பது மகிழ்ச்சியை அளிக்கும். ]பதினாயிரம் கோடி மைல்கள் உயரத்திலுள்ள ஒரு சதுர இடத்திற்கு என்னால் செல்ல முடியுமானால், அது பரிபூரண அன்பே. இந்தப் பக்கம், ஒவ்வொரு படியும் குறுகிக் கொண்டே வந்து முடிவில் நாம் உள்ள இடத்தை அடைகிறது. இது அழிந்து போகும் நிழல் மாத்திரமே. எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒன்றுண்டு என்னும் சிறு உணர்ச்சி நமக்குள்ளே உண்டாகிறது. அது என்னவென்று நமக்குத் தெரியாது. ஓ, என் விலையேறப்பெற்ற நண்பனே, என் அன்பார்ந்தவர்களே, சுவிசேஷத்தில் எனக்கு அருமையானவர்களே, தேவனுக்கென்று நான் பெற்றெடுத்த பிள்ளைகளே, உங்கள் போதகராகிய எனக்குச் செவி கொடுங்கள். நீங்கள்... அதை உங்களுக்கு விவரிக்க எனக்கு ஏதாகிலும் ஒரு வழி இருந்தால் நலமாயிருக்கும். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்னால் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை எங்கும் காணப்படவில்லை. ஆனால் இந்தக் கடைசி மூச்சுக்கு அப்பால் நீங்கள் இதுவரை கண்டிராத மிக மகத்தான ஒன்று. அதை விவரிக்க வழியேயில்லை. வழி எதுவுமில்லை. என்னால் விவரிக்க இயலாது. ஆனால் நண்பர்களே, நீங்கள் என்ன செய்த போதிலும், பூரண அன்பைப் பெறும் வரைக்கும் மற்றெல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளிவிடுங்கள். உங்கள் சத்துருக்கள் உட்பட எல்லாரையும் நேசிக்கும் நிலையையடையுங்கள். ஒருமுறை அங்கு சென்றது என்னை வித்தியாசமான ஆளாக மாற்றிவிட்டது. நான் மறுபடியும் பழைய சகோதரன் பிரான்ஹாமாக இருக்கவே முடியாது, முடியாது, முடியாது. 64விமானங்கள் குலுங்கினாலும், மின்னல் அடித்தாலும், ஒற்றர்கள் துப்பாக்கியால் என்னைக் குறி வைத்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய கிருபையினால் நான் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் ஒவ்வொரு நபருக்கும் என்னால் முடிந்தவரை சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அப்பாலுள்ள அந்த அழகான தேசத்துக்கு செல்லும்படி அவர்களை ஏவி, யுத்தத்தில் ஈடுபடப் போகிறேன். அது கடினமாகத் தோன்றும், அதற்கு அதிக பெலன் தேவைப்படும். இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. நமக்குத் தெரியாது. சரீரப் பிரகாரமாக நோக்கும் போது, அன்று எனக்கு நடந்த உடல் பரிசோதனையில் அவர்கள், “நீங்கள் இன்னும் 25 ஆண்டுகள் கடினமாக உழைக்கலாம். நீங்கள் திடகாத்திரமாயிருக்கிறீர்கள்'' என்றனர். அது எனக்கு உற்சாகத்தை அளித்தது. ஆனால் ஓ, அதுவல்ல. அதுவாக இருக்க முடியாது. எனக்குள்ளே இருக்கின்ற ஏதோ ஒன்று. இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக்கொள்ள வேண்டும். சாவுக்கேதுவான இது சாவாமையைத் தரித்துக்கொள்ள வேண்டும். 65கீஸின் குமாரர் எழும்பலாம். நான்... அவர்கள் செய்யும் எல்லா நற்கிரியைகளுக்கும் விரோதமாக எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை - ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குதல் போன்றவை. சாமுவேல் சவுலிடம், ''நீயும் தீர்க்கதரிசனம் உரைப்பாய்'' என்று சொன்னான் என்பதை நினைவு கூருங்கள். அவர்களில் அநேகர் மகத்தான பிரசங்கிகள், அவர்கள் பிரதான தூதர்களைப் போல் வார்த்தையைப் பிரசங்கம் பண்ண முடியும். இருப்பினும் அது தேவனுடைய சித்தம் அல்ல. தேவனே அவர்கள் இராஜாவாக இருக்க வேண்டியவர். சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்த விட்டுக் கொடுங்கள். சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். வீடு சென்று இயேசுவைக் காண வேண்டுமெனும் ஆவல் தோன்றுகிறது துறைமுக மணிகளின் இனிய ஓசையைக் கேட்க விரும்புகிறேன் அது என் பாதையைப் பிரகாசமாக்கி என் பயத்தைப் போக்கும் கர்த்தாவே, காலத்திரைக்கு அப்பால் நாங்கள் காணட்டும். கர்த்தாவே, துயரம் பயம் என்னும் திரையின் அப்பால் நோக்கி சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் அந்த தேசத்தை நான் காணட்டும் அது எங்கள் விசுவாச்தை அதிகரித்து எல்லா பயத்தையும் போக்கும் கர்த்தாவே, காலத்திரைக்கு அப்பால் அவர்கள் காணும்படி செய்யும். 66கர்த்தாவே, இன்று காலை இங்குள்ள இந்தச் சிறு சபை காலத்திரைக்கு அப்பால் காணமுடிந்தால்! அவர்கள் மத்தியில் எவ்வித ஊனமும் வியாதியும் இருக்காது, பரிபூரணத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இந்த இடத்துக்கும் அந்த இடத்துக்கும் இடையே ஒரு மூச்சு மாத்திரமே உள்ளது - வயோதிபத்திலிருந்து வாலிபத்துக்கு, காலம் என்பதிலிருந்து நித்தியத்துக்கு, நாளைய களைப்பு நேற்றைய துயரம் என்பதிலிருந்து இன்றைய பரிபூரணமான நித்தியத்துக்கு. தேவனே, இங்குள்ள ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அன்பின் வழியில் உம்மை அறியாதவர்கள் யாராகிலும் இங்கிருக்க நேர்ந்தால், பிதாவே, அவ்விதமான அன்பில்லாமல் மறுபிறப்பு, மறுபடியும் பிறத்தல் இல்லாமல் எதுவுமே அந்த பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியாது என்பதே உண்மையாகும். பரிசுத்த ஆவி - தேவன் அன்பாயிருக்கிறார். அது உண்மையென்று எங்களுக்குத் தெரியும். எங்கள் விசுவாசத்தினால் நாங்கள் மலைகளைப் பெயர்ந்து போகப் பண்ணினாலும், நாங்கள் பெரிய காரியங்களைச் செய்தாலும், அந்த அன்பு அங்கு இராவிட்டால், அந்தப் பெரிய ஏணியில் நாங்கள் ஏறிச்செல்ல முடியாது. ஆனால் அது இருக்குமானால், அது எங்களை இந்த உலகக் கவலைகளுக்கு மேலாக உயர்த்தி, அங்கு கொண்டு செல்லும். பிதாவே, இங்குள்ள ஜனங்களை நீர் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இன்று காலை நான் சத்தியத்தைக் கூற கேட்ட ஒவ்வொருவருக்கும் நீரே என் சாட்சியாய் இருப்பீராக. பண்டைய காலத்து சாமுவேல், “நான் அவர்களுக்கு உம்முடைய நாமத்தில் சத்தியத்தை தவிர வேறெதாகிலும் கூறியிருக்கிறேனா?'' என்று கேட்டது போல. அவர்களே நீதிபதிகள். கர்த்தாவே, என்னை நீர் அந்த தேசத்துக்கு கொண்டு சென்றீர் என்று இப்பொழுது நான் அவர்களிடம் கூறுகிறேன். அது உண்மையென்று உமக்குத் தெரியும். இப்பொழுதும் பிதாவே, உம்மை அறியாதவர்கள் யாராகிலும் இங்கிருக்க நேர்ந்தால், இந்த நேரத்தில் அவர்கள், ''கர்த்தாவே, உமது சித்தத்தை அறியும் உணர்வை எனக்குள் வையும்'' என்று கூறுவார்களாக. பிதாவே, இதை அருளும். 67இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் போது, உங்கள் கரங்களையுயர்த்தி, “சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூறுவீர்களா? ”தேவனே, உமது சித்தத்தை எனக்குள் வைப்பீராக.'' இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே, இனிமையாக, பிதாவினிடம், “தேவனே, இன்றைக்கு என் இருதயத்தில் உள்ள உலகப் பிரகாரமான எல்லா காரியங்களையும் வெறுத்துத் தள்ளி, என் வாழ்நாள் முழுவதும் உம்மை நேசித்து, உம்மை சேவிப்பேன். இன்று முதற்கொண்டு உமது வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வேத வசனத்தின் மூலமாகவும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்று கூறுவீர்களா? நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ் நானத்தைப் பெறாமலிருந்தால், ”கர்த்தாவே, நான் பெறுவேன்“ என்று கூறுங்கள். ”நான் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை...'' என்று கூறுங்கள். அதை பெறும்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது உங்களுக்கு அளிக்கும். அது உங்களுக்குத் தேவையான உறுதியையும் அன்பையும் அளிக்கும். ஓ, நீங்கள் வித்தியாசமாக உணர்ச்சியைப் பெற்றிருக்கக் கூடும். நீங்கள் கூச்சலிட்டு, அந்நிய பாஷைகள் பேசியிருக்கக் கூடும். அது நல்லதுதான். ஆனால் தெய்வீக அன்பு அங்கில்லாமல் போனால்... என்னை இப்பொழுது நம்புங்கள்“. “கர்த்தாவே, என் இருதயத்திலும் என் ஆத்துமாவிலும் உமது ஆவியை வைத்து, நான் அன்பு கூரவும், கனப்படுத்தவும், என் கடைசி மூச்சு என்னை விட்டுப் போகும்போது, என்னை அந்த தேசத்துக்கு கொண்டு செல்லும்; தெய்வீக அன்பை இன்று என் இருதயத்தில் கொண்டவனாயிருக்க அருள் புரியும்'' என்று சொல்லுங்கள். நாம் ஜெபிக்கும் போது நீங்கள் ஜெபம் பண்ணுங்கள், உங்கள் சொந்த வழியில் ஜெபம் பண்ணுங்கள். அதை உங்களுக்குச் செய்ய தேவனிடம் கேளுங்கள். உங்களை நான் நேசிக்கிறேன். உங்களை நான் நேசிக்கிறேன். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் விலையேறப்பெற்ற நரை மயிருடையவரே, நீர் கடினமாக உழைத்து பிள்ளைகளை வளர்த்திருப்பீர். ஏழை வயோதிப தாய்மார்களே, உங்கள் கண்ணீரை நீங்கள் துடைத்துக் கொண்டிருப்பீர்கள். அருமை சகோதரியே, இதை உனக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். அது மற்ற மூச்சின் அப்பால் இல்லை. அது இந்த அறையிலேயே உள்ளது. அது நாம் வாழும் பரிமாணத்தைப் பொறுத்தது. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சரீரம் அழிந்து போகக் கூடியது. ஆனால் ”கர்த்தாவே, என்னில் உமது சித்தம் நிறைவேற சித்தம் கொள்ளும்.'' நாம் ஒன்றாக ஜெபிக்கும் போது நீங்களும் ஜெபியுங்கள். 68கர்த்தாவே பயபக்தியுடன், உமது வார்த்தையின் அடிப்படையிலும் உமது பரிசுத்த ஆவியின் மூலமாகவும், எங்கள் பிறப்பு எங்கிருந்து வந்துள்ளது என்பதை அறிந்திருப்பதற்காக நாங்கள் மகிழ்கிறோம். நாங்கள் புருஷனுடைய சித்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனுடைய சித்தத்தினாலே பிறந்திருக்கிறபடியால் மகிழ்வுறுகிறோம். பிதாவே, மன்னிக்கும் கிருபையை இப்பொழுது வேண்டுகின்ற இவர்களுக்குள், பரிசுத்த ஆவி அந்த கிரியையை செய்ய வேண்டுமென்று இன்று வேண்டிக் கொள்கிறோம். அதை என்னால் செய்ய முடியாது. நான் வெறும் மனிதன், கீஸின் மற்றொரு குமாரன். ஆனால் எங்களுக்கு நீர், பரிசுத்த ஆவி, தேவை நான் சாமுவேலைப் போல் வார்த்தையின் சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒருவனாக இருப்பேனாக. அதை நீர் இம்மட்டும் உறுதிப்படுத்தி வந்திருக்கிறீர். உமக்கு நான் உண்மையுள்ளவனாக நிலைத்திருக்கும் வரைக்கும், அதை தொடர்ந்து செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். பிதாவே, இவர்கள் அனைவரும் இப்பொழுது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்களாக. இந்த நாள் அவர்களை விட்டு கடந்து போகாதிருப்பதாக. அவர்கள் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் வரும்போது, அவர்களிடம் நான் சற்று முன்பு கூறினது தத்ரூபமாக ஆகட்டும். இன்றைக்கு அமர்ந்து கொண்டிருக்கிற சாவுக்கேதுவான நாங்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு, எங்கள் இரவு உணவைக் குறித்தும், நாளை செய்ய வேண்டிய வேலையைக் குறித்தும், வாழ்க்கையின் கவலைகளையும் பிரயாசங்களையும் குறித்தும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறோம். இதெல்லாம் அப்பொழுது இருக்காது. அவை எல்லாம் மறைந்து போகும். எந்த கவலையும் இராது - நித்தியத்தின் பெருத்த சந்தோஷம் மாத்திரமே இருக்கும். பிதாவே, அவ்விதமான வாழ்க்கையை அவர்களுக்குத் தாரும். அவர்கள் ஒவ்வொருவருக்கும். அவர்கள் தாமே... பிதாவே, இதை நான் வேண்டிக் கொள்கிறேன், இந்த தரிசனத்தைக் குறித்து நான் கூறுவதைக் கேட்ட ஒவ்வொரு வரையும் நான் மறுபுறம் சந்திப்பேனாக. என்னுடன் இணங்காத மனிதர்களும் ஸ்திரீகளும் இங்கு இருக்க நேர்ந்தாலும், பிதாவே, அது எங்களுக்குக் குறுக்கே நிற்க வேண்டாம். அவர்களையும் நாங்கள் அங்கே சந்தித்து, அவர்களும் ஓடி வந்து, நாங்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, “எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே'' என்று ஆர்ப்பரிப்போமாக. அங்கே காண்பிக்கப்பட்டபடியே, கர்த்தாவே ஒவ்வொருவருக்கும் இருக்கட்டும். கர்த்தாவே, அவ்வாறே இருக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். பிதாவே, அவர்கள் காணப்படட்டும். இப்பொழுது நான் நித்திய ஜீவனை அவர்களுக்கு முன்பாக வைக்கிறேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளுவதற்கு தங்களுடைய பங்கைச் செய்வார்களாக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன், ஆமென். 69வியாதியஸ்தருக்கு ஜெபிக்க நமக்கு சில நிமிடங்களே உள்ளன. வியாதியாயுள்ள ஒரு சிறு பெண்ணும், நாற்காலியில் ஒரு ஸ்திரீ உள்ளதையும் காண்கிறேன். இப்பொழுது மிகவும் விலையேறப்பெற்ற என் சகோதரரே, சகோதரிகளே தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது, என்ன நடந்ததென்று எனக்கு - எனக்குத் தெரியாது. ஆனால் நான் மரிக்கும் போது, அங்கு நான் செல்ல தேவன் அருள்புரிவாராக. அந்த இடத்துக்கு நான் செல்லட்டும். அது எங்கு இருந்தாலும், அந்த இடத்தில் நான் இருக்க விரும்புகிறேன். மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட பவுலாக நான் இருக்க முயலவில்லை. அப்படி நான் கூறவில்லை. எனக்கு சிறிது உற்சாகமூட்ட அவர் முயன்றார் என்று நினைக்கிறேன். வந்து கொண்டிருக்கும் என் புது ஊழியத்தில் என்னை உந்தித் தள்ளுவதற்கென அவர் சிறிய ஒன்றை எனக்கு அளிக்க முயன்றார். 70ஒரு நிமிடம் ஒன்றை நான் படித்தால் அது அவபக்தியாக தென்படுமா? அப்படி செய்தால் பரவாயில்லையா? நாட்டின் சிறந்த பத்திரிகை ஒன்றில் - பில்லி கிரகாம். (சகோதரன் பிரான்ஹாம் செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையை வாசிக்கின்றார் - ஆசி) டாக்டர் பில்லி கிரகாம் இஸ்லாமுக்கு அழைக்கப்படுகிறார் என்னும் தலைப்பில் பெப்ருவரி 15, 1960 அன்று வெளியான ஆப்ரிகான்ஸ் டைம்ஸ் என்னும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையை எழுதியவர் ஒரு முஸ்லீம் (முகமதியர்). நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, அதைத் தொடர்ந்து அற்புதங்கள் நிகழவேண்டும் என்பது இவர் கருத்து. நான் அதிலிருந்து படிக்கிறேன்: இந்த கிறிஸ்துதான், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் என்று தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு வாக்களித்தார். சபை எப்பொழுதாகிலும் அந்தக் கிரியைகளைச் செய்துள்ளதா... அது வேதத்தில் காணப்படும் கிறிஸ்துவின் தன்மைகளை இன்று செய்து காண்பிக்க முடியுமா? பிரபலமாக விளங்கும் எந்த ஒரு சபையும் கிறிஸ்து செய்த அற்புதங்களில் பாதியாகிலும் செய்ய முடியுமா? அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைக் குறித்து இப்பொழுது பேச வேண்டாம். கிறிஸ்தவ மார்க்கத்தை போதிக்கும் நீர்... மரித்தோரை உயிரோடெழுப்ப முடியுமா? கடலின் மேல் நடக்க முடியுமா? வியாதியஸ்தரை குணமாக்கி குருடருக்கு பார்வையளிக்க முடியுமா? இது முகமதியர்களுக்கென்று நியமிக்கப்பட்ட மேற்கூறிய சகாப்தத்தின்படி அமைந்துள்ளதல்லவா? அல்லது இது நீங்கள் விசுவாசிப்பதாக கூறிக் கொள்வதைத் தொடர்ந்து வரவேண்டிய கிறிஸ்துவின் பரிசோதனை அல்லவா? 71இந்த முஸ்லீம் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அதற்கு பதில் கூறும் விதத்தில் எத்தனையோ கட்டுரைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. அவை இந்த முஸ்லீமை நிந்திப்பதாக உள்ளன. ஆனால் அவன் கூறினது சரியே. இவர்கள் கூறி வேண்டியது இதுதான்: அதற்கு சிறந்த பதில் வேதாகமத்தைப் படித்து குரானில் உள்ளதையும் அறிந்துகொள்வதே. இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது... குரான் தரம் தாழ்ந்துள்ளது. முகம்மதிய மார்க்கம் கிறிஸ்தவ மார்க்கத்தைக் காட்டிலும் உயர்வானது என்றும் அதை மிஞ்சிவிடக் கூடியது என்றும் கூறுவது வெறும் டம்பமான (Bombastic) கற்பனையே. இருப்பினும் சபைக்கு உரிய அற்புதங்களைக் குறித்து அக்கட்டுரை எழுதியவர் மிகவும் முக்கியமான அம்சத்தை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இங்கு கட்டுரை எழுதியவரின் உத்தமத்தை நாங்கள் மறுபடியும் சந்தேகிக்கிறோம். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள முஸ்லீம்களின் முன்னிலையில் சங்கை வில்லியம் பிரான்ஹாம் நிகழ்த்திய அற்புதங்களையும் அதன் விளைவாக 10,000 பேர் இரட்சகராகிய கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதையும் யாரால் மறுக்கமுடியும்?தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனிலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறும் வில்லியம் பிரான்ஹாமின் ஊழியமும், தென் ஆப்பிரிக்காவில் டி. எல். ஆஸ்பார்ன் நிகழ்த்திய ஊழியமும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இருப்பினும் நாங்கள் பில்லி கிரகாமின் சார்பில் 100% இருக்கிறோம். எழுப்பப்பட்ட கேள்விக்கு நாங்கள் பதிலளித்துவிட்டோம்.அந்த கேள்வி அர்த்தமற்றது. 72இவையனைத்தின் மத்தியிலும் அவன் நாம் “மூடபக்தி வைராக்கியமுள்ளவர்கள்'' என்றும், ”நாம் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறோம்'' என்றும் கூறினான். அவர்கள் தங்கள் சொந்த பத்திரிகையிலேயே தேவன் அற்புதங்களை செய்தார் என்று சாட்சி பகர வேண்டியதாயிருந்தது. தேவன் எப்பொழுதும் இருந்து வந்தது போலவே இன்றைக்கும் தேவனாயிருக்கிறார். அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை, அதை காண்பதில்லை என்று நீங்கள் நினைக்கக்கூடும். அது மறைக்கப்பட்டிருக்கவில்லை. அது ஒரு மூலையில் செய்யப்படவில்லை. அங்கு உட்கார்ந்திருந்த ஆயிரக்கணக்கானோர் நடந்த அற்புதங்களைக் கண்ணாரக் கண்டனர். அந்த ஊனமுற்ற பையன் அங்கே வந்தபோது, பரிசுத்த ஆவியானவர், அவன் வாழ்க்கையை குறித்து கூறினதையும், அங்கு நடந்ததையும் அவர்கள் கண்ட போது, 10,000 முஸ்லீம்கள் தரையில் முகங்குப்புற விழுந்து இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். செம்மறியாடு ஆகாரம் போஷிக்கும் டி. எல். ஆஸ்பார்னும் மற்றவர்களும் இன்னும் உள்ளனர். சகோ. ஆஸ்பார்ன் இன்னும் முஸ்லீம்களின் மத்தியில் செல்லவில்லை என்று நினைக்கிறேன். முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று உரிமை கோருகின்றனர். ஆயினும் சிங்கத்தின் வாயிலிருந்தும் கரடியின் வாயிலிருந்தும் ஆட்டை விடுவிக்கக் கூடிய தேவன் நமக்கு இன்னும் இருக்கிறார். 73அவர்கள் அதை உணர்ந்து எழுதினதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் உணர்வதில்லை என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் அதற்கு தங்கள் முதுகை திருப்பி நடந்து சென்று, ''ஓ, அந்த நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றனர். முஸ்லீம்கள், “ஓ, அவர்களா, வேதாகமம் முழுவதுமே கடந்து போய்விட்டது. நீங்கள் அனைவருமே தவறு. நீங்கள் ஒரு மனிதனை வணங்குகிறீர்கள் - இயேசு என்னும் பெயருடைய மரித்துப்போன ஒரு மனிதனை. அவர் அநேக ஆண்டுகளுக்கு முன்பு மரித்தார். அவர் உயிர்த்தெழுந்தார் என்பதெல்லாம் வெறும் பேச்சு'' என்கின்றனர். ஆனால் டர்பனில் நடந்த கூட்டத்தில் அவர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. அவர் அங்கு நின்றுகொண்டு, அவர் முன்பு செய்த அற்புதங்களையே செய்து, அவர்களுக்கு நிரூபித்துக் காண்பித்தார். இப்பொழுது ஸ்தாபனங்களும் கூட அதை அங்கீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. நான் வேதத்திலிருந்து போதிக்கும் உபதேசங்களை கைவிட வேண்டும் என்று எனக்கு எழுதின அதே நபர் தான் அந்த பத்திரிகையில் அவ்வாறு பதிலளித்து எழுதினார். தேவன் எப்படியாயினும் அவர்கள் தம்மை துதிக்கும்படி செய்வார். அது உண்மை. அவர் எப்படியாயினும் அவர்கள் தம்மை துதிக்கும்படி செய்வார். 74வியாதியாயுள்ள ஒரு சிறு பெண் இங்கு உட்கார்ந்திருக்கிறாள். அது உங்கள் பிள்ளையா? அவளுக்கு என்ன கோளாறு, சகோதரியே? மூளையில் இரத்தப் பெருக்கு என்று கூறுகிறார்கள். அவளுக்கு நான்கு வயதாகிறது. அப்படியானால் இது பெண் தானா? தாயே, அந்த பெண்ணை காக்கக் கூடியது ஒன்று மாத்திரமே. அதுதான் தேவன். அது உங்களுக்குத் தெரியும். (“அப்பொழுது இருந்ததைக் காட்டிலும் இவள் எவ்வளவோ பரவாயில்லை'') சகோ. நெவில், நீங்கள் சென்று அந்த பெண்ணுக்கு ஜெபம் செய்ததுண்டா? அதைக் கேட்பது மிக்க மகிழ்ச்சி. சகோ. நெவில் சென்று அந்த பெண்ணுக்கு ஜெபம் செய்ததற்கு, அவள் சிறிது தேறியிருக்கிறாள். செம்மறியாட்டு ஆகாரத்தை அறிந்துள்ள மேய்ப்பர்கள் இன்னும் இருக்கின்றனர். 75அங்கு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் அருமை சகோதரியே, உங்கள் கோளாறு என்ன? புற்று நோய். நல்லது. இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். புற்று நோயிலிருந்து குணமானவர்கள் இங்கு எத்தனை பேர் உள்ளனர், உங்கள் கைகளை உயர்த்துங்கள். இங்கு பாருங்கள், சகோதரியே. தேவன் சுகமளிப்பவர். அது நமக்குத் தெரியும். நான் அங்கு சென்று அந்த பெண்ணின் மூளையிலுள்ள இரத்தப் பெருக்கை நிறுத்த முடியும், அல்லது இந்த ஸ்திரீயிலுள்ள புற்று நோயை அகற்றி விட முடியும் என்று உங்களிடம் கூறினால், நான் தவறுரைப்பவனாயிருப்பேன். ஆனால் எனக்கு ஒன்று தெரியும்: ஒரு கரடி இருந்தது - புற்றுநோய், கட்டி, பார்வையில்லாத நிலை, மரணம் கூட ஒரு நாள் தேவனுடைய ஆட்டை கவ்வினது. நான் தேவனுடைய வல்லமையுடன் அங்கு சென்று அவனைக் கொன்று, அந்த ஆட்டை மீட்டுக்கொண்டு வந்தேன். அது உண்மை. இன்றைக்கு நாம் புறப்பட்டுச் செல்கிறோம் - பிரபலமான இன்னார் - இன்னார் என்னும் பெயரைக் கொண்டவராக அல்ல. நான் ஜெபம் என்னும் சிறு கவணைக் கொண்டவனாக புறப்பட்டுச் செல்கிறேன். அது அவளை மீட்டுக் கொண்டுவரும். அதை நீ விசுவாசிக்கிறாய், இல்லையா சகோதரியே? நீயும் விசுவாசிக்கிறாய், இல்லையா சகோதரியே? அதை நீ விசுவாசிக்கிறாய், இல்லையா சகோதரியே? நீயும் விசுவாசிக்கிறாய், இல்லையா சகோதரியே? 76நான் ஜெபிக்க செல்லும் போது நீங்கள் தலை வணங்கியிருங்கள் (வியாதியஸ்தருக்கு ஜெபிக்க சகோ. பிரான்ஹாம் மேடையை விட்டுச் செல்கிறார் - பியானோ வாசிப்பவர் நம்பிடுவாய் என்று வாசிக்கின்றார் - ஆசி) அது சரி. அன்புள்ள பிதாவே, நீர் உதவி செய்யாமல், இன்னுமாக நடக்க முடியாத, அல்லது அங்கும் இங்கும் செல்ல முடியாதிருக்கின்ற ஒரு அழகான வாலிப ஸ்திரீ இங்கே படுத்துக் கிடக்கின்றாள். சத்துரு அவளைப் பிடித்திருக்கின்றான். எந்த ஒரு வைத்தியனும் அவளை சுகமாக்க முடியாத அளவிற்கு வெகு தொலைவில் இருக்கின்றது. ஒரு வைத்தியனும் எதையுமே செய்யக் கூடாத அளவிற்கு சத்துருவானவன் இவளை மிகவுமாக கால அளவிற்கு அப்பால் பிடித்து ஆட்டித் தள்ளியிருக்கின்றான். ஆனால் இவளோ உம்முடைய கையளவிற்கு அப்பாலே இல்லை கர்த்தாவே, நீர் உம்முடைய கரத்தை இவள் மீது வைக்கலாம். தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, இந்த வாலிப ஸ்திரியின் மீது என் கரங்களை வைத்து, இந்த மூளை இரத்தப் போக்கை நான் கடிந்து கொள்கிறேன் இயேசு கிறிஸ்து நாமத்தினாலே. ஒரு இயல்பான ஸ்திரீயாக மறுபடியுமாக வர நான் இவளை அழைக்கிறேன். தேவனுடைய மகிமைக்கென்று இவள் ஜீவிக்கட்டும். இவள் சுகமாகி, இந்த சபைக்கு உள்ளும் வெளியேயும், இங்கே உள்ளே வந்திருக்கின்ற மற்றவர்களைப் போல, இதே விதமாக நடந்து, தேவனுக்கு ஸ்தோத்திரத்தை செலுத்தக்கடவள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக இது ஆகட்டும். 77இவளுடைய மயிர் நரைத்திருக்கின்றவாறே, இன்னும் சில காலங்களுக்குப் பிறகு, இனியும் வயது செல்லாத, ஆனால் வாலிபமாகவே இருக்கின்ற நிலையில், நான் கண்ட, அங்கே அப்பால் இருக்கின்ற அந்த தேசத்தில் இவள் இருப்பாள். ஆனால் இவளுக்கு அன்பானவர்கள் இவளை நேசித்தவர்கள் இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்கள். ஒரு பயங்கரமான சிங்கமான புற்று நோய் என்னும் மகத்தான சத்துரு மருத்துவருடைய கை எட்டும் தொலைவிற்கு அப்பாலே இவளை பிடித்து குலுக்கி இழுத்துப் போட்டிருக்கின்றான். இவளை மறுபடியுமாக கொண்டு வர நான் இங்கு வந்திருக்கின்றேன். தோல்வியற்ற கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அவருக்கு தூதனாகிய (Ambassador) நான், அந்த புற்று நோய் என்னும் சிங்கத்தை கொல்கின்றேன். அது இவளை விட்டு நீங்கக் கடவது, இவள் தாமே சுகமாகி இன்னுமாக தேவனுடைய மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் அநேக ஆண்டு காலமாக ஜீவிப்பாளாக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக. ஆமென். இப்பொழுதும், பரலோகப் பிதாவே, ஒரு பெரிய கவசத்தோடும் அல்ல, தீட்டப்பட்ட ஈட்டியோடல்ல, ஒரு சொற்பொழிவாளனுடைய சொல்வன்மையும் மொழித் திறனையும் கொண்டு அல்ல, ஆனால் ஒரு பொதுவான, விசுவாசம் என்னும் சிறிய கவண் கல்லைக் கொண்டு, நான் இந்த ஆத்துமாவிற்காகவும், மருத்துவருடைய கை எட்டும் தூரத்திற்கு அப்பாலே இவளை பிடித்து புற்று நோய் என்னும் எதிரியால் அப்பால் கொண்டு போகப்பட்டிருக்கும் இந்த சரீரத்திற்காகவும் நான் வருகிறேன். இந்த காலை கர்த்தாவே, இவளை புல்லுள்ள இடத்திற்கு அமர்ந்த தண்ணீரண்டைக்கு மறுபடியும் கொண்டு வரத்தக்கதாக, இவளுக்காக நான் வருகின்றேன். ஜெயம் பெறுகின்ற இயேசு என்னும் நாமத்தினாலே, அதற்கு அவருடைய தூதனாக இருக்கின்ற நான், நாங்கள் செய்த இந்த ஜெபத்தின் வல்லமையால், இவள் திரும்பவுமாக கொண்டு வரப்படுவாள் என்று நான் போலியில்லாத விசுவாசத்துடன் நான் நம்புகிறேன். அப்படியே ஆகக்கடவது. ஞானஸ்நான ஆராதனை இன்னுமாக இருப்பதாக நான் நம்புகிறேன்? ஒரு நிமிடம் தலை நிமிர்வீர்களா? போதகர் என்னிடம் கூறியுள்ளார்... இந்த ஜனங்கள் மிகவும், மிகவும் வியாதியாயிருக்கிறார்கள். அவர்கள் குணமாகிவிடுவார்கள். அது சரியாகிவிடும். தேவனுடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் தவறாது. நாம் அவைகளின் பின்னால் செல்கிறோம். 78அவர்கள் ஞானஸ்நான ஆராதனை வைத்திருக்கிறார்கள். சிலர் இப்பொழுது வீடுகளுக்குச் செல்லவேண்டும். இன்றிரவு மறுபடியும் ஆராதனை இருக்கும். இன்றிரவு வர முடியாதவர் யாராகிலும், உங்களுக்காக இப்பொழுது ஜெபம் செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா - இன்றிரவு வர முடியாதவர். அப்படியானால் இங்கு வருவீர்களா? இன்றிரவு வர முடியாதவர் - இன்றிரவு ஜெப வரிசைக்கு எனக்கு நிறைய நேரம் இருக்கும். இந்த ஜனங்களுக்கு அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. அங்கே ஒரு சிறிய பையனை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? சரி. (ஒரு சகோதரன் முன்னே நடந்து வந்து சகோதரன் பிரான்ஹாமிடம், ''சரி இதை நான் உமக்கு அளிப்பேனானால்?'' என்று கூறுகிறார் - ஆசி) ஆம், சகோதரனே. உமக்கு மிக்க நன்றி. இதைச் சரியாக இப்பொழுது அல்லது பிறகு நான் படித்துப் பார்த்தால் சரிதானே? உமக்கு நன்றி, ஐயா. இப்பொழுது எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு சற்று நேரம் எங்களுக்குத் தருவீர்களானால், நாங்கள் ஞானஸ்நான ஆராதனை நடத்திவிடுவோம். நீங்கள் அதைக் காண விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். இக்காலையில் ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்கள் - உடுப்பு மாற்றிக்கொள்ள பெண்கள் இந்த பக்கம் வாருங்கள், ஆண்கள் அந்த பக்கம் போங்கள். இந்த வியாதியஸ்தருக்கு நான் ஜெபித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் ஞானஸ்நான ஆராதனைக்கு ஆயத்தப்படலாம். இப்பொழுது நீங்கள்... 79இப்பொழுது இன்றிரவு ஒரு சிறு ஜெபவரிசையை அமைக்க முயல்வேன். உடனடியாக, அவர்கள் உள்ளே வந்தவுடன், இன்றிரவு நாங்கள் எபேசியர் முதலாம் அதிகாரத்திலிருந்து தொடங்குவோம். நீங்கள் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும் - உங்களுக்குச் செல்ல சபை இல்லை என்றால். ஆனால் உங்களுக்குச் சொந்த போதகரும் சபையும் இருக்குமானால், நீங்கள் ஆதரிக்கும் உங்கள் விலையேறப் பெற்ற சபைக்குச் செல்லுங்கள். இப்பொழுது இவ்விடம்விட்டு வீட்டுக்குப் போக வேண்டியவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களால் முடியும் போது எங்களைச் சேர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். உங்களுக்கும் ஜெபிக்கப்பட வேண்டுமா சகோதரனே? உம்முடைய காரியம் என்ன? (சகோதரன் “என்னுடைய முதுகு” என்கின்றார் - ஆசி) உயர் இரத்த அழுத்தம். மற்றவர்கள் ஒரு நிமிடம் தலைவணங்குங்கள். நாம் ஜெபிக்கப் போகிறோம். பிதாவே, மேய்ப்பனின் சிறு கவணுக்காக, அந்த சிங்கத்தை அடிபணியச் செய்த அந்த ஜெபத்துக்காக இன்று உமக்கு நன்றி செலுத்துகிறேன். அந்த ஆட்டுக்குட்டி அதனிடமிருந்து பிடுங்கப்பட்டு அதன் தாய் தந்தையினிடத்தில் சேர்க்கப்பட்டது. எங்கள் சகோதரனுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அவரையும் பத்திரமாகக் கொண்டு வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவருடைய இரத்த அழுத்தமும், அவருடைய சரீரத்திலுள்ள மற்ற தொல்லைகளும் தீருவதாக. கர்த்தாவே, நான் அவர் பின்னால் சென்று அவரை மீட்டுக் கொண்டு வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அப்படியே ஆகக் கடவது. ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 80நான் நடந்து கொண்டிருக்கும் போது பார்வையிழந்த ஒரு சிறுவனைக் காண்கிறேன். இன்னும் ஒரு காரியத்தை நான் கூற விரும்புகிறேன். நான் மிகவும் வியாதிப்பட்டிருந்தேன். நான் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்தேன்.... கூடுமானவரைக்கும் இதைக் கேட்கத் தவற வேண்டாம். நான், “தேவனே, வெளியே ஒருவர் வந்து நிற்கும் சத்தத்தை நான் கேட்க நேர்ந்தால், நான் என்ன செலுத்துவேன் என்று எண்ணினேன். என் மனைவி, “பில்லி, வயோதிபர் ஒருவர் உங்களைக் காண வந்திருக்கிறார்'' என்பாள். இதோ வழுக்கை விழுந்த, முகத்தில் நரைத்த தாடியுள்ள ஒருவர் வருகிறார். அவர் என்னிடம் வந்து, ''நீங்கள் தான் சகோ. பிரான்ஹாமா?'' என்பார். நான், “ஆமாம், ஐயா. நான் தான்'' என்பேன். “என் பெயர் சீமோன்” என்று சொல்லிவிட்டு, அவர் கையை என் மேல் வைத்து விட, ''நீங்கள் விசுவாசி தானே, சகோ. பிரான்ஹாம்'' என்பார். ''ஆம்'' ''அது குணமாகிவிடும்'' - வேதாகமத்தின் சீமோன் பேதுரு. அதை நான் எவ்வளவாக பாராட்டுவேன். அவர் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. என் மேல் அவர் கையை வைக்க வேண்டியதுதான். அது குணமாகிவிடும். அப்பொழுது என் மனதில் தோன்றினது என்னவென்றால்: தேவனுடைய உதவியினாலும், அவருடைய கிருபையினாலும், நான் ஜனங்களிடம் செல்லும்போது, பல்லாயிரக்கணக்கானோர் அதையே விசுவாசிப்பார்கள். அப்பொழுது நான், ''அப்படியானால் கர்த்தாவே, கூடுமானவரைக்கும் நான் ஒவ்வொருவரிடமும் செல்வேனாக. நான்...'' என்று எண்ணினேன். சீமோன் வந்து... அல்லது பவுல்அல்லது வேறு யாராகிலும் உள்ளே வந்து ''நீங்கள் தான் சகோ. பிரான்ஹாமா?'' என்று கேட்டால், “ஆம்” என்பேன். அவர்கள் தங்கள் கைகளை என் மேல் வைத்து என்னை நோக்கி, “சரி, சகோ. பிரான்ஹாமே” என்று சொல்லிவிட்டு வெளியே நடந்து சென்றால் நான் குணமாகிவிடுவேன். நான் நிச்சயம் குணமாகிவிடுவேன். நான் சொன்னேன்...'' எனக்கு தைரியம் அப்பொழுது வந்துவிடும். “நான் குணமாகிவிடுவேன் என்பேன்'' என்று எண்ணினேன். ஆம், ஐயா. இன்றைக்கு அப்படி விசுவாசிக்கும் ஜனங்கள் இருக்கின்றனர். அதைச் செய்யத்தான் நான் உங்களிடம் வருகிறேன். உங்கள் மேல் கைகளை வைத்து தேவனிடம் கேட்க. 81இவன் என்னிடம் வர முடியுமா என்று காண நான் அவனிடம் செல்ல விரும்புகிறேன். இந்தச் சிறிய, கண் பார்வையற்ற பையன். எவ்வளவு காலமாக இவன் குருடாயிருக்கிறான்? (ஒரு சகோதரி ''பிறப்பிலிருந்தே“ என்று கூறுகிறார் - ஆசி) பிறப்பிலிருந்தா? ஹாய், சிறு பையனே! ஓ, நீ ஒரு மிக அழகான சிறிய பையன். ஓ, கிருபையுள்ள தேவனே! இந்த அழகான, அருமையான சிறு பையன், பிறந்தது முதல் பார்வையற்றவனாய் இருக்கின்றான், இவனால் பார்க்க முடியாமல், மருத்துவர்களுடைய காரியங்களுக்கு அப்பால் இருக்கின்றான். வாழ்க்கையில் ஒரு சிறிய வாய்ப்பும், இந்தச் சிறிய பையன் பெறுவதற்கு முன்பாகவே சத்துருவானவன் மருத்துவருடைய கை எட்டும் தொலைவிற்கு அப்பால் இவனை பிடித்துக் கொண்டு போய்விட்டான். ஆதலால் கர்த்தாவே, இந்த மகன் காலை இவனை திரும்பவுமாகக் கொண்டு வரும், இந்த எளிமையான ஜெபம் என்னும் கவண் கல்லைக் கொண்டு, அவனை தொடர்ந்து வருகிறேன், தேவனே, அந்த பிசாசாகிய சத்துருவை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சந்தித்து, தேவனுக்காக இந்தச் சிறிய பையனை உரிமை கோருகிறேன். சத்துரு இவனிடமிருந்து திருடியிருக்கின்றதை இவனுக்கு திரும்ப அளித்து, தேவனுக்கென்று இவனுடைய பார்வையை உரிமை கோருகிறேன். அதை இவன் தாமே பெற்றுக் கொள்ளட்டும். அது இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஆகக்கடவது. நான் அதை உரைத்துவிட்டேன். இப்பொழுது, அருமையான சகோதரியே, நீங்கள் ஒரு இமியளவு கூட சந்தேகம் கொள்ள வேண்டாம், இந்த சிறிய பையன் சரியாகப் போகின்றான். இவன் பார்ப்பதை இந்த ஜனங்களுக்கு காண்பிக்க இவனை திரும்பவுமாக சபைக்கு நீங்கள் கொண்டு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இவனுடைய பார்வையை இவனுக்கு அளியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே. 82கர்த்தராகிய இயேசுவே இவன் மீது அதிக ஜெபத்தை நாங்கள் ஏறெடுத்த இந்த சிறியவளுக்காக! ஆனால் இக்காலையில், நீர் எனக்கு அளித்த இந்த சிறிய கவண் கல்லை நிரப்பிக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் வருகிறேன். கர்த்தாவே, உம்முடைய வல்லமையால், எடுக்க... புற்றுநோயின் வாயிலிருந்து வெளியே எடுக்க, மரணத்தின் வாயிலிருந்தே வெளியே எடுக்க, சில்லென்று விரைத்து, மரித்துப் போய்விட்டனர் என்று அறிவித்த விட்ட பிறகும் உயிரோடு எழுப்ப, இதைக் கொண்டு (கவண் கல் - தமிழாக்கியோன்) நீர் எனக்கு உதவி செய்தீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இந்தச் சத்துருவை தொடர்ந்து வருகிறேன். ஆதலால் நல்ல ஆரோக்கிய நிலைக்கு இவளை திரும்பவுமாக கொண்டு வாரும், கர்த்தாவே. இதை அருளும், தேவனுடைய மகிமைக்கென்று இது செய்யப்படுவதாக. நீர் வியாதிப்பட்டிருக்கிறீரா? நீர் ஒரு விசுவாசியா? கர்த்தாவே, இந்தச் சிறிய கவண் செல்லுகின்ற அளவிற்கு இவளை நான் கொண்டு வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, இது இவளை விட்டு நீங்கி திரும்பவுமாக வராமல் இருப்பதாக. ஆமென்...?... நல்லது, உமக்கும் உம்முடைய மகளுக்கும் சகோதரன் ஹார்லியை, சென்று கொண்டு வந்த அதே சிறிய கவண் கல். இப்பொழுது, பரலோகப் பிதாவே நீர் எனக்கு அளித்த இந்தச் சிறிய கவணை உபயோகித்து, நீர் எனக்கு கூறினீர். ''நீ ஜனங்களை விசுவாசிக்கச் செய்து, நீ ஜெபிக்கையில் உத்தமமாக இருந்தால் இந்தச் சிறிய கல் கொல்லுகின்ற குறியிடத்திற்கு செல்லும். கர்த்தாவே. இவளுடைய வேண்டுகோளிற்கிணங்க நான் அதை அனுப்புகையில் இப்பொழுது அது தாமே செல்லட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது ஆகக் கடவது. ஆமென். 83சரி, சகோதரி. இப்பொழுது நாம், நரம்புகள் மருத்துவர்களுடைய காரியத்திற்கு அப்பால் உள்ளது. உமக்கு அமைதி உண்டாக்கும் ஏதோ ஒரு மருந்தைத் தான் அவர்களால் கொடுக்க முடியும், ஆனால் அதற்கு பிறகு அது உம்மை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இக்காலை அதை நாங்கள் தொடரப் போகிறோம். வெளியே சென்று, உம்மை திரும்ப கொண்டு வர. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) கர்த்தராகிய இயேசுவே... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... வி-சு-வா-ச-ம், என்னும் ஐந்து சிறிய கற்கள், ஜெபம் என்னும் கவண். அந்த நரம்பு தளர்ச்சியின்...?... பிடியிலிருந்து என்னுடைய சகோதரியை நான் கொண்டு வருகிறேன். நான் இவளை சமாதானத்திற்கும், நிழலான புல்லுள்ள இடங்களுக்கும் அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நான் செய்கிறேன். ஆமென். நல்லது, பிதாவாகிய தேவனே, இந்தச் சிறிய பெண், அது தசை சம்பந்தமான கோளாறாய் இல்லாததால் நாங்கள் மிகவுமாக சந்தோஷமடைகிறோம். ஆனால் என்னவாயிருந்தாலும், கர்த்தாவே அது இன்னும் உம்முடைய கையளவு தூரத்தில் இருக்கின்றது. ஆகவே விசுவாசம் என்னும் சிறிய கவணுடனும் இந்த கல்லுடனும் நான் வருகிறேன். நான் எறியத் தக்கதாக எல்லா பலத்துடன் இந்தக் கல்லை நான் நெருக்குகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இது இலக்கை அடிப்பதாக. எங்கள் சகோதரி நலமாகட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைச் செய்கிறேன். 84இந்த இளம் தாயும், இப்பொழுது நான் பேசின, அந்த மறுபக்கத்தில், அந்த மகிமையுள்ள தேசத்தில் இவள் சந்திக்க விரும்பும் இந்த சிறிய குழந்தையும். ஆகவே இது... இன்னுமொரு ஆளை வளர்க்கின்ற அளவிற்கு இந்த தாய் ஜீவிக்கமாட்டாள், அல்லது இந்த சிறியனும் உம்முடைய உதவி இல்லாமல் ஜீவிக்க முடியாது. ஆனால் சத்துருவை நோக்கி - குறி பார்த்து எல்லா பலத்துடன் இந்த கவணைக் கொண்டு வருகின்றேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த காரியத்தை கவணைக் கொண்டு அடிக்கின்றேன். தேவனுடைய மகிமைக்கென்று இவர்கள் நலமாக இருப்பார்களாக. இயேசுவின் நாமத்தில். ஆமென்...?... ஓ, அது மிகவும் அருமையாயுள்ளது. நான் சந்தோஷமடைகிறேன். நல்லது, அந்த ஊழியம், கண்டறிகின்ற அப்பொழுதிருந்த ஒரு மகத்தான ஊழியம். அது கிரியைகளை...?... எங்கள் பரலோகப் பிதாவே, சாத்தான் இந்தச் சிறிய தாயை மருத்துவர்களின் கைகளிலிருந்து அப்பால் பிடித்து இழுத்துச் சென்றிருக்கின்றான். அவர்கள் மருந்து என்னும் கவணை மாத்திரமே கொடுக்க முடியும், கர்த்தாவே, அது தாமே இவளைச் சுற்றி சுற்றி கிழித்துப் போட்டு, இவள் எந்நிலையில் இருக்கின்றாள் என்பதை அறியாதிருக்கச் செய்யும். பிறகு அவள் சுயநினைவிற்கு வருகையில், மிக மோசமான நிலையில் இருப்பாள். ஆனால் விசுவாசம் என்னும் கவணையும் கல்லையும் கொண்டு, சரியாக குறி வைத்து இலக்கை நோக்கி எறிய நான் வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த நரம்பு தளர்ச்சியை தேவனுடைய மகிமைக்கென்று நான் எடுத்துப் போடுகிறேன். ஆமென். 85அன்புள்ள தேவனே, சகோதரன் ஜார்ஜ் படுக்கையில் மரித்துக் கொண்டிருந்தார், அது நீண்ட நாளிற்கு முன்பல்ல. விசுவாசம் அவருக்கு என்ன செய்தது என்பதை நான் கண்டேன். இப்பொழுது கர்த்தாவே, கீல்வாதம் இவருக்கு இருக்கின்றது. அவர்கள் இவருக்கு கார்டிசோன் மருந்தை, வலியை சற்று குறைக்கின்ற மருந்தைத் தவிர, அதை எடுத்துப் போடாது. ஆதலால் இந்த ஜெபத்தைக் கொண்டு குறி பார்க்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?... இவர் தாமே வீடு சென்று சுகமாயிருக்கட்டும். சகோதரனே, உமக்கு நன்றி. அன்பே, நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? ஓ, என்னே! காது செவிடாகின்ற அளவு உங்களுக்கு சரியாக கேட்கின்றதா? அஹ் - உஹ். மானிட அறிவுக்கு எட்டாத ஒன்று. கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் ஒரு விசுவாசியா? (சகோதரி “ஆமென்” என்று கூறுகிறார் - ஆசி) இந்த நாட்களில் ஒன்றில், அங்கே அப்பாலே ஒரு அழகான ஸ்திரீயை நான் காண்கிறேன். நீங்கள் மறுபடியும் என்றென்றும் வாலிபமாகவே இருக்கப் போகிறீர்கள். அவருடைய மகிமைக்கென்று நீங்கள் இப்பொழுது ஜீவிக்க விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சென்று (சகோதரி “இல்லை, நான் என்னுடைய மகனுக்காக துக்கித்துக் கொண்டிருக்கிறேன்” - ஆசி) உங்கள் மகனா?(“அவன் சென்று இரண்டு வருடங்கள் ஆகின்றது”) நீங்கள் அவனை கண்டு பிடிக்க முடியவில்லையா? (“அவன் தேவனுடைய கரத்தில் இருக்கின்றான்'') ஓ, அவன் - அவன் கடந்து சென்றுவிட்டானா? (''உஹ் - உஹ். மரணம் என்னும் பள்ளத்தாக்கினூடாக'') ஓ, அதுவா. (”ஆகவே தான் என்னுடைய துக்கம் மிக துக்கமாயிருக்கிறீரா? ஆம்“), (”நான் கவலையாயிருக்கிறேன். நான் துக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ளேன்“). ஆகவே நான் உணருவது என்னவென்றால், அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால், ”அவர் என்னை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். அவரில் கவலை என்பதே கிடையாது'' அருமை சகோதரியே. நீங்கள் உண்மையாகவே நலமாக உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இக்காலை, அந்த தரிசனத்தைக் இவர்கள் கேட்டார்களா? (அந்த மற்றொரு சகோதரி, “இவளால் கேட்க முடியும்'' என்று கூறுகிறார் - ஆசி) நல்லது, நீங்கள் இவர்களுக்கு கூறுங்கள். நல்லது, என்ன நடந்தது என்று இவர்கள் உனக்கு கூறப் போகிறார்கள். இங்கே உங்களுடைய சுவாசத்திற்கு அப்பால், அந்த விலையேறப்பெற்ற பையன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் போலவே வாலிபமாக இருப்பீர்கள். நேசியுங்கள், அதை மாத்திரம்... நேசியுங்கள். (அந்த சகோதரி ''நான் இங்கே இருக்க விரும்பவில்லை. தேவனுடைய சித்தமாயிருக்குமானால் நான் அவனிடம் செல்ல விரும்புகிறேன்'' என்று கூறுகிறார்கள் - ஆசி) அன்புள்ள பரலோகப் பிதாவே, ஜீவியத்தின் ஓட்டமானது ஓடி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் காரியங்கள் விடப்பட்டிருக்கவில்லை. ஆகவே நதிக்கு அப்புறத்தில் இருக்கின்ற இவளுடைய விலையேறப்பெற்ற பையன் மாத்திரம் திரும்பி பார்க்கக் கூடுமானால், “இன்னும் சில நாட்கள் மாத்திரமே'' என்று கூறுவான். கர்த்தாவே, பனி மூட்டத்தினூடாக அந்த மகிமையான தேசத்திற்கு இவளைக் கொண்டு செல்லும் அந்த படகிற்காக இவள் காத்துக் கொண்டிருக்கின்றாள். பிதாவே, இவளை ஆசிர்வதியும். இவளுடைய இருதயத்தை தேற்றும். நதிக்கு அப்புறத்தில் அது ஒரு மகத்தான ஒன்று கூடுதலாக இருப்பதாக.